இந்தியத் திரையுலகிற்கான 64வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ திரைப்படத்துக்குக் கிடைத்துள்ளது.

சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘24’ படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த தயாரிப்பு நிர்வாகத்துக்கான தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

இவை தவிர, சிறந்த பாடலாசிரியருக்கான விருது மீண்டும் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘எந்தப் பக்கம்...’ என்ற பாடலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது அக்சய் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரஸ்தம் படத்தில் நடித்தமைக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது. சிறந்த நடிகை சுரபி (மலையாளம்), சிறந்த இயக்குனர் ராஜேஷ் மபூஸ்கர் (மராத்தி), சிறந்த திரைப்படம் ‘காசவ்’ (மராத்தி), சமூகப் பிரச்சினைக்கான சிறந்த திரைப்படம் ‘பிங்க்’ (ஹிந்தி), சிறந்த துணை நடிகை சயீரா வாஸீம் ‘டங்கல்’, சிறந்த நடன இயக்குனர் ராஜு சுந்தரம் ‘ஜனதா கெரேஜ்’, சிறந்த இசையமைப்பு பாபு பத்மநாபா ‘ஆலமா’, சிறந்த படத் தொகுப்பு ரமேஷ்வர் ‘வென்ட்டிலேட்டர்’