" விளையாட்டுத்துறை சட்டத்தை மாற்றவேண்டும் இல்லையேல் வீழ்ச்சிப்பாதையில் பயணிக்கும் "

By Priyatharshan

11 Jan, 2016 | 09:38 AM
image

தற்போது எமது நாட்டில் காணப்­ப­டு­கின்ற விளை­யாட்டுத் துறையில் மாற்­றத்தை கொண்­டு­வ­ரா­விடின் எதிர்­வரும் காலத்தில் பாரிய அழிவை நோக்கி பய­ணிக்கும் ஆபத்து காணப்­ப­டு­வ­தாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும் அமைச்­ச­ரு­மான அர்­ஜூன ரண­துங்க எச்­ச­ரித்தார்.

விளை­யாட்டுத் துறை அமைச்சு உட்­பட கிரிக்கெட் நிர்­வா­கத்தின் கீழ் முன்­னெ­டுக்­கப்­படும் தற்­போ­தைய செயற்­பா­டு­க­ளினால் எதிர்காலத்தில் விளை­யாட்டுத் துறை எதிர்­நோக்கும் பாரி­ய­ள­வி­லான மறை­மு­க­மான சவால்­க­ளுக்கு தற்­போ­தைய விளை­யாட்டுத்துறை அமைச்­சரே பொறுப்­பேற்கவேண்டும் எனவும் அவர் சுட்­டிக்காட்­டினார்.

கொழும்பில் அமைந்­துள்ள துறை­மு­கங்கள் அமைச்சில் நேற்றுநடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இதன்போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

தற்­போது எமது நாட்டில் காணப்­படும் விளை­யாட்டுத் துறைசட்­ட­மா­னது முத­லா­ளி­த்துவ சட்­ட­மா­கவே அமைந்­துள்­ளது. இதனை மாற்­றி­ய­மைக்க வேண்­டிய அவ­சி­யத்தை நான் கடந்­த ­கா­லங்­களில் தொடர்ச்­சி­யாக தெரி­வித்­தி­ருந்தேன். அந்­த­வ­கையில் இது தொடர்பில் அண்­மையில் பிர­தமரும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

நடை­பெற்று முடிந்த இலங் கைக் கிரிக்கெட் நிறு­வ­ன தேர்­தலில் எனது தோல்­வியினை நான் ஏற்றுக்கொள்­கின்றேன். இந்த தேர்­தலில் நான் போட்­டி­யி­டாமல் எந்­த­ வொரு நபர் போட்­டி­யிட்­டி­ருந் தாலும் இந்­நி­லையே ஏற்­பட்­டி­ருக்கும். காரணம் எமது விளை­ யாட்டுத் துறை சட்­ட­மா­னது முதலா­ளித்­து­வங்­க­ளுக்கு ஏற்­ற­வாறேஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது.

இருந்த போதிலும் எமது நாட்டின் கிரிக்கெட்டை நேசிக்கும் வகையில் அதன் முக்கியத்துவத்தை அறிந்து எனக்கு வாக்களித்த அனைத்து தரப்பினர்களுக்கும் நான் எனது நன்றியினை கூற கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right