நஷ்ட ஈட்டை செலுத்தி முடிக்க கால அவகாசம் கோரிய மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

15 Jul, 2024 | 01:26 PM
image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டை செலுத்தி முடிக்க கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் மீதி பணத்தை செலுத்தி முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இதுவரை 58 மில்லியன் ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீதி பணத்தை செலுத்தி முடிக்க 6 வருடகால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி மூலம் உயர் நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த உயர் நீதிமன்றம், மீதி பணத்தை செலுத்தி முடிக்க ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

மேலும், குறித்த காலத்திற்குள் மீதி பணத்தை செலுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் உரிய நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என 7 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04
news-image

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-03-25 17:01:14
news-image

19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30...

2025-03-25 16:57:39
news-image

கொழும்பு - கண்டி வீதியில் விபத்து...

2025-03-25 16:16:22
news-image

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின...

2025-03-25 17:11:15
news-image

புதிய கிராம அலுவலரை நியமிக்குமாறு கோரி...

2025-03-25 16:14:00
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; பிரதான...

2025-03-25 16:02:08
news-image

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை...

2025-03-25 15:49:05
news-image

இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு உதவுங்கள்...

2025-03-25 16:06:25
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள்...

2025-03-25 15:25:35
news-image

அநுராதபுரத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

2025-03-25 14:52:55