(எம்.நியூட்டன்)
வட்டுக்கோட்டை சிவபூமி தேவார மடம் ஞாயிற்றுக்கிழமை (14) தமிழ் நாடு சென்னை உயர்நீதிமன்றம் நீதியரசர் ஸ்ரீ.சிவஞானம் தம்பதிகளால் திறந்து வைக்கப்பட்டது.
தெல்லிப்பழை பிரதான வீதி, வட்டுக்கோட்டை (வட்டுக்கோட்டை பொதுச்சந்தை முன்பாக) சிவபூமி அறக்கட்டளைக்கு வட்டுக்கோட்டை தெல்லிப்பழை பிரதான வீதியில், திரு.தி.பாலசுப்பிரமணியம் நினைவாக அவரது குடும்ப உறுப்பினர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இல்லத்தை புனரமைத்து திறந்து வைக்கப்பட்டது.
சிவபூமி அறக்கட்டளை தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளை இணைச் செயலாளர் ம.தயாகரன் வரவேற்புரையும் சிவஸ்ரீ.ஐயா.வாசுதேவக் குருக்கள், நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,திருக்கேதீஸ்வர மடம் தர்மபுரம் ஆதீன ஸ்ரீ.மீனாட்சி சுந்தரம் தம்பிரான் சுவாமிகள் ஆசியுரையை நிகழ்த்தினார்கள்.
வலி மேற்கு பிரதேச செயலாளர் திருமதி. கவிதா உதயகுமார், இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் ய. அனிருத்தன் வாழ்துரையை ஆற்றியதுடன், சிறப்புரை சட்டத்தரணி உமாகரன் இராசையா நிகழ்த்தினார் தொடர்ந்து, பொன்னாலை சந்திர பரத கலாலய நிறுவுனர் சிறிமதி சிறிதேவி கண்ணதாசன் நெறியாள்கையில் திருமுறை ஆடல் ஆற்றுகை நிகழ்வும் இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM