வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகள் திட்டமிட்டு கையகப்படுத்தப்படுகின்றன ; ஐரோப்பிய தூதுக்குழுவிடம் கிழக்கு முதலமைச்சர்

Published By: Priyatharshan

07 Apr, 2017 | 03:17 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் காணிகளை படையினரும் வன பாதுகாப்பு திணைக்களமும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் திட்டமிட்டவகையில் இடம்பெற்றுவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

போல் கோட்பிரி தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினருடன் சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பிபோது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறிப்பாக  சம்பூர் விட்டுத்திட்ட பிரச்சினை தொடர்பாக அவருக்கு எடுத்துக்கூறினோம். அத்துடன் சம்பூரில் இதுவரைக்கும் கட்டி முடிக்கப்படாத வீடுகள் துரிதமாக அதன் வேலைகளை முடித்து மக்களுக்கு வழங்க இருக்கின்றோம் அதற்கான உதவிகளின் தேவை குறித்து விளக்கினோம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படைப்பிரச்சினைகளை தீர்ப்பதுதொடர்பாகவும் தூதுக்குழுவினரிடம் தெரிவித்தோம். அதேபோன்று மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்ற கிராமங்கள் மற்றும் மீள் குடியேற்றப்பட்டு இன்னும் அத்தியாவசிய தேவைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்ற கிராமங்கள் தொடர்பாகவும் விளக்கி கூறினோம்.

அதேபோன்று வடக்கில் வில்பத்துவில்  முஸலி மற்றும் மறிச்சிக்கட்டு பிரதேசங்களில் வன பாதுகாப்பு தினைக்களத்தால் மக்களின் காணிகள் கையப்படுத்தி வருவது தொடர்பாகவும் தூதுக்குழுவினரிடம் விளக்கினோம். மத்திய அரசாங்கத்தால் இவ்வாறு திடீர் திடீரென மக்களின் காணிகள் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அத்து மீறி பறிக்கின்ற நடவடிக்கை தொடரபாகவும் தெரிவித்தோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19