இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இன்று 15 ஆம் திகதி முதல் தாய்லாந்துக்கு விசா இன்றி செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தாய்லாந்து தூதரகம் இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு வந்த பின்னரே இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையர்களுக்கு தாய்லாந்துக்கு விசா இலவசம் தொடர்பில் நேற்று பாங்கொக்கிலிருந்து எந்த உறுதிப்படுத்தலையும் பெறவில்லை. எனவே, உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தவுடன் இலங்கை குடிவரவு மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும். அப்போது, அந்த திட்டம் அமலுக்கு வரும்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையிலுள்ள தாய்லாந்து தூதரகத்தின் இணையத்திலும் புதிய திட்டம் தொடர்பில் எவ்வித அறிவித்தலும் அறிவிக்கப்பட்டவில்லை.
இதேவேளை, இலங்கையர்கள் தாய்லாந்திற்கு விசா இன்றி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டால் இதுவே முதல் முறையாகும்.
தாய்லாந்து குடிமக்கள், விசா இல்லாமல் இலங்கைக்கு வருவதற்கு ஏற்கெனவே இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.
விசா இன்றி செல்லும் இலங்கையர்கள் தாய்லாந்தில் 30 முதல் 60 நாட்கள் தங்கி இருக்க முடியும். எவ்வாறாயினும், அங்கு பயணம் செய்யும் இலங்கையர்களிடம் பணம், தங்குமிடம் மற்றும் திரும்புவதற்காக விமான பயண டிக்கெட்டுகளுக்கான சான்றுகள் இருக்க வேண்டும்.
தாய்லாந்து விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகளின் அனுமதியுடன் அந்நாட்டிற்குள் உள்நுழைய முடியும்.
தாய்லாந்து நாட்டின் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ட்ரைஸ்ரீ தைசரணகுல் தெரிவிக்கையில்,
இந்த புதிய திட்டம் சுற்றுலா பயணிகள் மற்றும் குறுகிய கால வணிக பயணிகளுக்கு பயனளிக்கும். வருகையின் போது விசாவிற்கு தகுதியான நாடுகளின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிக்கும்.
இந்த ஆண்டு தாய்லாந்துக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி, மொத்தம் 18.2 மில்லியன் சுற்றுலா பயணிகளின் வருகையினால் 24 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டி தந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் சீனா, மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, ஆண்டுதோறும் சுமார் 350,000 இலங்கையர்கள் தாய்லாந்திற்கு வருகை தருகிறார்கள்.
மேலும், டிஜிட்டல் நாடோடிகள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சமையல் மற்றும் தற்காப்புக் கலைகள் போன்ற திறன்களைக் கற்க விரும்புபவர்களை இலக்காகக் கொண்டு தாய்லாந்து இன்று 15 ஆம் திகதி முதல் டெஸ்டினேஷன் தாய்லாந்து விசாவை (டிடிவி) அறிமுகப்படுத்துகிறது.
இந்த விசா மூலம் தாய்லாந்தில் 180 நாட்கள் வரை தங்க அனுமதிப்பளிப்பதோடு, ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். விண்ணப்பதாரர்கள் தங்கள் நாட்டில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் டிடிவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தாய்லாந்தில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள், முதுகலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வருடம் தங்கி வேலை தேடவோ, பயணம் செய்யவோ அல்லது ஆராய்ச்சி நடத்தவோ அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM