(நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 18ஆவது போட்டியில் ஜெவ்னா கிங்ஸை எதிர்த்தாடிய கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 6 போட்டிகளில் 6 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் 3ஆம் இடத்திலுள்ள கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஜெவ்னா கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பின்வரிசையில் விஜயகாந்த் வியாஸ்காந்த் உட்பட மூவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதால் ஜெவ்னா கிங்ஸின் மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடந்தது.
வியாஸ்காந்த் ஆட்டம் இழக்காமல் பெற்ற 25 ஓட்டங்களே ஜெவ்னா கிங்ஸ் சார்பாக பெறப்பட்ட தனிநபருக்கான அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.
அவரை விட பின்வரிசையில் ஏஷான் மாலிங்க 15 ஓட்டங்களையும் ப்ரமோத் மதுஷான் 10 ஓட்டங்களையும் முன்வரிசையில் குசல மெண்டிஸ் 17 ஓட்டங்களையும் சரித் அசலன்க 13 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 11 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஷதாப் கான் மிகத் துல்லியமாக பந்துவீசி 4 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பினுர பெர்னாண்டோ 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
110 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் 9.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.
மொத்த எண்ணிக்கை 25 ஓட்டங்களாக இருந்தபோது ஏஞ்சலோ பெரேரா 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
ஆனால், ரஹ்மானுல்லா குர்பாஸ், முஹம்மத் வசீம் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் 33 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 57 ஓட்டங்களுடனும் முஹம்மத் வசீம் 18 பந்துகளில் 35 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM