தம்புள்ள சிக்சர்ஸை சுப்பர் ஓவரில் வெற்றிகொண்டது கோல் மார்வல்ஸ்

14 Jul, 2024 | 10:31 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஐந்தாவது லங்கா ப்றிமியர் லீக் அத்தியாயத்தின் 16ஆவது போட்டியில் தம்புள்ள சிக்சர்ஸை சுப்பர் ஓவரில் கோல் மார்வல்ஸ் வெற்றிகொண்டது.

ஏற்கனவே இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்த கோல் மார்வல்ஸ் அணிக்கு இந்த வெற்றி மேலும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இரண்டு அணிகளும் 148 ஓட்டங்கள் என்ற ஒரே மொத்த எண்ணிக்கையைப் பெற்றதால் சுப்பர் ஓவர் அமுல்படுத்தப்பட்டது.

மஹீஷ் தீக்ஷன  வீசிய  சுப்பர் ஓவரில் தம்புள்ள சிக்சர்ஸ் 2 விக்கெட்களையும் இழந்து 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பதிலுக்கு நுவன் துஷார வீசிய சுப்பர் ஓவரில் கோல் மார்வல்ஸ் விக்கெட் இழப்பின்றி 12 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கோல் மார்வல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசையில் அலெக்ஸ் ஹேல்ஸ் (38), டிம் சீஃபேர்ட் (23) ஆகியோரும் மத்திய வரிசையில் ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் (16), சஹான் ஆராச்சிகே (15), ஜனித் லியனகே (13) ஆகியோரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹமத் நபி 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷான் ஹேமன்த 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நுவன் ப்ரதீப் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

149 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள சிக்சர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

ரீஸா ஹெண்ட்றிக்ஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 72 ஓட்டங்களை யும்  இப்ராஹிம் ஸத்ரான் 30 ஓட்டங்களையும்  பெற்று  அணியைப் பலப்படுத்தினர். அவர்களை விட அணித் தலைவர் மொஹமத் நபி (25), லஹிரு உதார (12) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

சமநிலையில் முடிவடைந்த போட்டியிலும் சுப்பர் ஓவரிலும் திறமையாக பந்துவீசிய மஹீஷ் தீக்ஷன ஆட்டநாயகன் விருதை தனதாக்கிக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08
news-image

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப்...

2025-01-19 19:56:12
news-image

துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்;...

2025-01-19 12:39:42
news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53
news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06