மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை விரிவுபடுத்த இந்தியாவிடமிருந்து 10 டொலர் மில்லியன்கள் நன்கொடையாக கிடைத்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிய வளாகத்தில் LTL வர்த்தக குழுமத்தினால் அமைக்கப்பட்ட 150 கிலோவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி கட்டமைப்பை கையளிக்கும் நிகழ்வில் நேற்று (13) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு LTL வர்த்தக நிறுவனத்தினால் ருன்வெலி மகா சாயவில் மின்சார ஒளிக் கட்டமைப்பொன்று நிறுவப்பட்டது. அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
LTL நிறுவனம் மின்சார சக்தி துறையில் பாரிய வேறுபாடுகளை ஏற்படுத்திய நிறுவனம். இலங்கை தனது தொழிலை ஆரம்பித்து சர்வதேச அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தின் அர்ப்பணிப்பே அதற்கு காரணமாகும். 2002ஆம் ஆண்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சியை பொறுப்பேற்றுக்கொண்ட வேளையில் 18 மணித்தியால மின்வெட்டு காணப்பட்டது.
2022ஆம் ஆண்டிலேயே அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற வேளையில் 13 மணித்தியால மின்வெட்டு காணப்பட்டது. ஆனால் ஆறு மாதங்களுக்கு அந்த நிலைமையை மாற்றியமைத்து நாட்டில் நல்ல நிலைமையை ஏற்படுத்த ஜனாதிபதியால் முடிந்தது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை விரிவுபடுத்த இந்தியாவிடமிருந்து 10 டொலர் மில்லியன்கள் நன்கொடையாக கிடைத்திருக்கிறது.
அதன்படி 100 டொலர் மில்லியன் பெறுமதியானதாக மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை பலப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM