கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கண்டாவளை பொது அமைப்புகள் மற்றும் கண்டாவளை  மக்கள் ஒன்றிணைந்து   அவர்களுடன்  போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் .

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  இப் போராட்டம்  இன்று  நாற்பத்தி ஏழாவது நாளாகவும்  தொடர்கின்றது.