நான்கு மாதங்களில் அரசாங்கத்தின் மீதான மக்களின் அங்கீகாரம் மூன்று மடங்கு அதிகரிப்பு - வெரிட்டே ரிசேர்ச் 

14 Jul, 2024 | 06:25 PM
image

நான்கு மாதங்களுக்கு முன்னர் இருந்ததை விட அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் ஆய்வினூடாக தகவல் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக, பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரப் போக்கு தொடர்பான விடயத்தில் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை உணர்வதாகவும் இந்த ஆய்வினூடாக குறிப்பிடப்படுகிறது. 

இது தொடர்பான மேலதிக விபரங்களாவன :

வெரிட்டே ரிசர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய 'தேசத்தின் மனநிலை' கருத்துக்கணிப்பின்படி, நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதோடு, பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரப் போக்கு பற்றி மக்கள் நம்பிக்கையாக உணர்கிறார்கள்.  

2024 பெப்ரவரியில் 7%ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரத்தின் மதிப்பீடு, ஜூலை மாதத்தில் 24%ஆக அதாவது மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து பதிலளித்தவர்களில், 28% மக்கள் அது நல்லது அல்லது சிறந்தது என்று தெரிவித்துள்ளனர்.

 இது 2024 பெப்ரவரியில் காணப்பட்ட 9%இல் இருந்து மூன்று மடங்கு அதிகரிப்பைக் குறித்து நிற்கிறது.

நாட்டின் பொருளாதார நிலைமைகள் சிறப்பான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன என்று நம்பும் மக்களின் பங்கும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பதிலளித்தவர்களில் 30% பேர் இந்தக் கருத்தை கொண்டிருந்ததோடு, இது 2024 பெப்ரவரியில் 9%ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

1. அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் | 24% 

"தற்போதைய அரசாங்கம் செயற்படும் முறையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு, பதிலளித்தவர்களில் 24% பேர் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளனர்(பிழைவரம்பு± 2.73%). 

2023 ஜூனில் 21%ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரத்தை விட இது அதிகமாகவே காணப்படுகின்றது.

2. பொருளாதார நிலைமைகள் பற்றிய மதிப்பீடு | நல்லது அல்லது சிறந்தது: 28% 

"நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை சிறப்பு, நன்று அல்லது மோசம்" என மதிப்பிடுமாறு கேட்டபோது, 28% மக்கள் அது நல்லது அல்லது சிறந்தது என்று கூறியுள்ளனர் (பிழைவரம்பு± 2.87%).

இது 2023 ஜூன் மாதத்திலும் 27%ஆக, அதாவது கிட்டத்தட்ட சமமான மதிப்பீட்டையே கொண்டிருந்தது.

3. பொருளாதாரக் கண்ணோட்டம் | மேம்பட்டு வருகின்றது: 30% 

"ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதார நிலைமைகள் மேம்பட்டு வருகின்றதா அல்லது மோசமடைந்து செல்கின்றதா?" என்ற கேள்விக்கு பதிலளித்தவர்களில், 30% பேர் பொருளாதாரம் மேம்பட்டுவருவதாக நம்புகின்றனர் (பிழைவரம்பு± 2.91%).

இது 2023 ஜூன் மாதத்திலும் 29%ஆக, கிட்டத்தட்ட சமமான மதிப்பீட்டையே கொண்டிருந்தது.

கருத்துக்கணிப்பை நடைமுறைப்படுத்தல்

வழக்கமாக நடத்தப்படும் இக்கருத்துக்கணிப்பு வெரிட்டே ரிசர்ச்சின் Syndicated Surveys செயற்கருவியின் ஒரு பகுதியாகும். வாக்களிப்புப் பங்காளராக வென்கார்ட் சர்வே (பிரைவட்) லிமிடட் (Vanguard Survey (Pvt) Ltd)செயற்படுகிறது. இச்செயற்கருவி இலங்கையர்களின் உணர்வுகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை ஏனைய நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.

நாடளாவிய ரீதியில் தனித்தனி குடும்பங்களில் இருந்து வயது வந்த இலங்கையர்கள் 1,038 பேரைக் கொண்ட பல கட்ட சமவாய்ப்பு பதில் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, 2024 ஜூன் 28 முதல் ஜூலை 06ஆம் திகதி வரை இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இக்கருத்துக்கணிப்பு 95% நம்பிக்கை இடைவெளியில் ±3.04% அதிகபட்ச மாதிரி பிழைவரம்பைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்படுத்தும் செயன்முறையில் ஏற்படக்கூடிய குறைபாடுகளால் இப்பிழைவரம்புகள் மேலும் பாதிக்கப்படலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதான எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரா? பிரதமர்...

2024-10-13 12:12:07
news-image

விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த...

2024-10-13 12:00:53
news-image

பொறுப்புக்கூறலுக்கு உள்நாட்டு பொறிமுறை - உயிர்த்த...

2024-10-13 12:05:06
news-image

பிரிக்ஸ் அமைப்பில் இணைகிறது இலங்கை :...

2024-10-13 11:40:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சிவராம்...

2024-10-13 11:24:35
news-image

ஹுங்கமவில் கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து...

2024-10-13 11:19:29
news-image

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை...

2024-10-13 11:03:13
news-image

ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு...

2024-10-13 11:23:53
news-image

லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் -...

2024-10-13 11:04:44
news-image

அநுர - ரணில் இடையே வித்தியாசமில்லை...

2024-10-13 10:30:26
news-image

196 ஆசனங்களுக்கு 8388 வேட்பாளர்கள் போட்டி...

2024-10-13 10:13:12
news-image

வடமராட்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு...

2024-10-13 10:50:56