நாட்டை மீட்கும் ஜனாதிபதி ரணிலின் பொருளாதார திட்டம் வலுவடைந்துள்ளது - செஹான்

14 Jul, 2024 | 03:17 PM
image

பொருளாதார ரீதியாக நாட்டை மீட்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் வலுவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். 

அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிய வளாகத்தில்  LTL வர்த்தக குழுமத்தினால் அமைக்கப்பட்ட 150 கிலோவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி கட்டமைப்பை கையளிக்கும் நிகழ்வில் நேற்று சனிக்கிழமை (13) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,   

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துச் செல்லும் செயற்றிட்டம் வலுவடைந்திருக்கிறது.  

அதற்காக பல்வேறு பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்போது மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான வாய்ப்புக்களை அதிகளவில் வழங்கி அந்த துறையை பலப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 

அதேபோல் நெட் மீடரின் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் மின்சார அலகுகளுக்கு மாத்திரம் கொடுப்பனவு செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின் வசதியை வழங்கும் செயற்றிட்டத்தை துரிதப்படுதும் வகையிலேயே ஜய ஸ்ரீ மகா போதியவுக்கு சூரிய சக்தி கட்டமைப்பு பொருத்தப்பட்டிருக்கிறது.

மேலும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்பதற்கான பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28