வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கபில்டன் போல் இப்போராட்டம் குறித்து தெரிவிக்கையில்,
இந்த போராட்டத்தின் நோக்கம் எமக்கான வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வது மாத்திரமன்றி, எதிர்கால இளைய தலைமுறைகளும் எம்மைப் போல் அவல நிலையை எதிர்கொள்ளாமல் இருக்கும் வகையிலான கல்வி சீர்திருத்தத்தை வலியுறுத்துவதையும் மையமாகக் கொண்டுள்ளது.
பட்டதாரிகளுக்கான வேலையில்லா பிரச்சினை என்பது பட்டதாரிகளை மாத்திரமல்ல, அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் சமூகத்தையும் வாழ்வாதார மற்றும் பொருளாதார ரீதியாக வெகுவாக பாதித்துள்ளதுடன், எதிர்கால தலைமுறைகளையும் முழு சமுதாயத்தையும் மிக மோசமாக பாதிக்கும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
எனவே, தற்போதைய தேர்தல் காலத்தில் எமக்கான பிரச்சினைகளை வெளிக்கொணர்வதன் மூலம் ஏதேனும் ஒரு வகையிலான சாதகமான வாய்ப்பினை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
போராட்டங்கள் மூலம் மட்டுமே எங்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எமது நாட்டை பொறுத்தவரை நிதர்சனமான உண்மை.
எனவே, இதை உணர்ந்து அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் ஒன்றிணைந்து தொழில் உரிமைக்கான ஜனநாயக ரீதியான போராட்டத்துக்கு வலு சேர்க்கவும் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM