(நெவில் அன்தனி)
தியகம, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் ஆரம்ப நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் முல்லைத்தீவு மாணவன் ஜெயகாந்தன் விதுஷன், மாத்தளை மாணவன் எஸ். துதிதர்ஷிதன் ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்து வரலாறு படைத்தனர்.
அத்துடன் முதலாம் நாளன்று 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதலில் ஒரு புதிய சாதனை நிலைநாட்டப்பட்டதுடன் இரண்டு முந்தைய சாதனைகள் சமப்படுத்தப்பட்டது.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய முத்தையன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த விதுசன் அப் போட்டியை 9:02.10 நிமிடங்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்து பலத்த பாராட்டைப் பெற்றார்.
இந் நிகழ்ச்சியில் முல்லைதீவு மாவட்ட பாடசாலை மாணவர் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும்.
அவரது பாடசாலையைச் சேர்ந்த மாரிமுத்து நிலவன் (9:10.07 நி.) 6ஆம் இடத்தையும் சந்திரமோகன் இசைப்பிரியன் (9:45.62 நி.) 9ஆம் இடத்தையும் பெற்றனர்.
இதே போட்டியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி வீரர் கே. திவாகர் (9:04.19 நி.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5000 ஓட்டப் போட்டியில் மாத்தளை இந்து தேசிய கல்லூரி வீரர் எஸ். துதிதர்ஷிதன் (16:04.70 நி.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்து அசத்தினார். அவர் இரண்டாம் இடத்தைப் பெற்ற வீரரைவிட 16 செக்கன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை விசேட அம்சமாகும்.
முதலாம் நாளன்று 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் விசாக்கா வித்தியாலய வீராங்கனை டில்கி கருணாரட்ன 11.96 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.
இதே வயதுப் பிரிவில் நீளம் பாய்தல் போட்டியில் 5.80 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த டிலினி ராஜபக்ஷ முந்தைய சாதனையை சமப்படுத்தினார்.
23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.15 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை மெய்வல்லுநர் கழக வீரர் நதுன் கவீஷ பண்டார முந்தைய சாதனையை சமப்படுத்தினார்.
இரண்டாம் நாள் பகல் வரை நான்கு புதிய சாதனைகள்
போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் பகல்வரை 4 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இதற்கு அமைய இன்று பகல்வரை மொத்தம் 5 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.81 மீற்றர் உயரம் பாய்ந்த நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர் துஷேன் சில்வா புதிய சாதனையை நிலைநாட்டினார்.
அப் போட்டியில் பங்குபற்றிய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீரர் சி. துஷாந்தன் 3.90 உயரம் தாவி வெண்கலப் பதக்கம் வென்றார்.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 1:11.06 நிமிடங்களில் ஓடி முடித்த கம்பளை விக்ரமபாகு மத்திய கல்லூரியைச் சேர்ந்த ரி. அபிஷேகா புதிய சாதனை நிலைநாட்டினார்.
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஒட்டப் போட்டியை 1:58.92 நிமிடங்களில் நிறைவு செய்த மாத்தறை ராகுல கல்லூரி வீரர் நேதன் வில்அத்தர புதிய சாதனை நிலைநாட்டினார்.
இதேவேளை, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10000 மீற்றர் வேகநடைப் போட்டியை 52:21.22 நிமிடங்களில் நிறைவுசெய்த காலி பிட்டதெனிய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சத்துர சம்பத் புதிய சாதனையை நிலைநாட்டினார்.
அப் போட்டியில் இதே கல்லூரியைச் சேர்ந்த இருவர் 2ஆம், 3ஆம் இடங்களைப் பெற்றதன் மூலம் அக் கல்லூரியின் ஆதிக்கம் வெளிப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM