அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கொலை முயற்சி என எவ்பிஐ தெரிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப்மீதான துப்பாக்கி பிரயோகத்தை நாங்கள் கொலை முயற்சி என கருதுகின்றோம் என்று எவ்பிஐயின் பிட்ஸ்பேர்க் அலுவலகத்தின் விசேட முகவர் கெவின் ரொஜெக் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபரின் நோக்கங்கள் குறித்தும் அவர் யார் என்பது குறித்தும் கண்டறிவதற்கான தீவிர நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் தெரிந்த பொதுமக்கள் அவற்றை பகிர்ந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாங்கள் துப்பாக்கிபிரயோகத்தினை மேற்கொண்டவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் தறுவாயில் உள்ளோம்,அந்த நபர் தன்னை அடையாளப்படுத்தக்கூடிய எந்த தடயத்தையும் வைத்திருக்கவில்லை இதன் காரணமாகவே அவர் யார் என்பதை கண்டுபிடிப்பது தாமதமாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM