புத்தளம் - கருவலகஸ்வெவ நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் விளக்கேற்றி பூஜை செய்து, புதையல் தோண்ட முற்பட்ட ஐந்து பேரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சனிக்கிழமை (13) கைது செய்துள்ளனர்.
நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்கள் விளக்கேற்றி பூஜை செய்த பின்னர், புதையல் எடுப்பதற்காக நிலத்தை தோண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிக்கவெரட்டிய, வித்திக்குலிய மற்றும் நவகத்தேகம பகுதிகளைச் சேர்ந்த 5 நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, அலவாங்கு, பூஜைக்கு பயன்படுத்திய விளக்கு, இரண்டு மோட்டார் சைக்கள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் திணைக்களத்தினர் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளில் கருவலகஸ்வெவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM