18 வயதின் கீழ் தெற்காசிய கூடைப்பந்தாட்டம் : இலங்கையை வீழ்த்தி ஆசிய கிண்ண தகுதியைப் பெற்றது இந்தியா

Published By: Digital Desk 7

14 Jul, 2024 | 09:59 AM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் சனிக்கிழமை (13) இரவு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தெற்காசிய கூடைப்பதாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 87 - 62 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியீட்டி சம்பியனான இந்தியா, 18 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றது.

முதல் இரண்டு ஆட்டநேர பகுதிகளில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட போட்டியில் இடைவேளையின்போது இந்தியாவும் இலங்கையும் தலா 43 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தன.

எனினும் இடைவேளையின் பின்னர் ஏகப்பட்ட தவறுகளை இழைத்த இலங்கை, புள்ளிகள் பெறும் பல வாய்ப்புகளை கோட்டை விட்டு தோல்வியைத்  தழுவியது.

ஓரிரு இலங்கை வீரர்கள் தாங்களே புள்ளியைப் பெறவேண்டும் என்ற சுய நல போக்குடன் விளையாடியமையும் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அத்துடன் இலக்குகளை நோக்கி பந்தை எறிந்து புள்ளிகளைப் பெறக்கூடிய வீரர்கள் இலங்கை குழாத்தில் இடம்பெற்றபோதிலும் அவர்களை பயற்றுநர்கள் களம் இறக்காதது ஏன் என்ற கேள்வியும் எழச் செய்தது. இதுவும் இலங்கையின் படுதோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்தது.

போட்டியின் முதலாவது ஆட்டநேர பகுதியில் இரண்டு அணியினரும் கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொண்டதுடன் அப் பகுதியை 3  புள்ளிகள் வித்தியாசத்தில் 19 - 16 என இந்தியா தனதாக்கிக்கொண்டது.

இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் திறமையாக விளையாடிய இலங்கை, அப் பகுதியை 27 - 24 என தனதாக்கி இடைவேளையின் போது புள்ளிகள் நிலையை 43 - 43 என சமப்படுத்தியது.

ஆனால், இடைவேளையின் பின்னர் மூன்றாவது ஆட்ட நேர பகுதியில் இலங்கை வீரர்கள் ஏகப்பட்ட தவறுகளை இழைத்ததுடன் கிட்டத்தட்ட 10 சந்தர்ப்பங்களில் புள்ளிகள் பெறும் வாய்ப்பை கோட்டை விட்டனர். இதனை சாதமாக்கிக்கொண்ட இந்திய அணி அப் பகுதியை 20 - 7 என தனதாக்கி 13 புள்ளிகள் வித்தியாசத்தில் (63 - 50) முன்னிலை அடைந்தது.

கடைசி ஆட்டநேர பகுதியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா அப் பகுதியையும் 24 - 12 என்ற புள்ளிகள் தனதாக்கி 87 - 62 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனானது.

இந்தியா சார்பாக எம். இஷான் 22 புள்ளிகளையும் எம். தனசேகர் 19 புள்ளிகளையும் அணித் தலைவர் லாவிஷ் 17 புள்ளிகளையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை சார்பாக டெரன் பேர்னார்ட் 13 புள்ளிகளையும் எவீன் சேனாரத்ன 13 புள்ளிகளையும் அணித் தலைவர் மெத்திக்க ஜயசிங்க 10 புள்ளிகளையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் பங்களாதேஷை 59 - 57 (5 - 12, 23 - 10, 13 - 22, 18 -  13)  என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மாலைதீவுகள் வெற்றிபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06
news-image

வட மாகாணத்தில் மேசைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டம்

2025-01-14 14:11:23
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக்...

2025-01-13 22:15:59
news-image

தனது பதவியை இடைநிறுத்தியதற்கு நியாயம் கோரி...

2025-01-13 15:21:48
news-image

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப...

2025-01-13 10:05:18
news-image

மெல்பேர்ன் டெஸ்டுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து...

2025-01-13 10:05:39
news-image

24H சீரிஸ் கார் ஓட்டப் பந்தயத்தில்...

2025-01-13 04:59:17
news-image

மென்செஸ்டர் SA ஏற்பாட்டில் அழைப்பு கால்பந்தாட்ட...

2025-01-12 22:09:08