எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் நடிகர் பிரசாந்த் நடிப்பில் தயாரான 'அந்தகன்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அந்தகன்' எனும் திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார்.
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'அந்தகன்' எனும் திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் பிரசாந்த் தமிழ் திரையுலகில் தொலைத்த அவரது இடத்தை மீண்டும் பெறுவார் என திரையுலகினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM