மணிரத்னம் வெளியிட்ட ஹன்சிகா மோத்வானியின் 'காந்தாரி' பட முன்னோட்டம்

13 Jul, 2024 | 06:28 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் 'காந்தாரி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் சர்வதேச நட்சத்திர முகமான மணிரத்னம் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'காந்தாரி' எனும் திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, 'மெட்ரோ' சிரீஷ், மறைந்த நடிகர் மயில்சாமி, 'தலைவாசல்' விஜய் , 'ஆடுகளம்' நரேன், ஸ்டண்ட் செல்வா, வினோதினி, பவன், பிரிகிடா சகா, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எல். வி. கணேஷ் முத்து இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர்.‌‌ கண்ணன் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரியாகவும், நரிக்குறவர் இன பெண்ணாகவும் இரட்டை வேடத்தில் முதன்முறையாக ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிறார்.   வழக்கமான பேய் பட பாணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கும் வணிக ரீதியாக குறைந்தபட்ச ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படக் குழுவினர் படத்தை  வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ரொக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்'...

2025-03-24 18:06:30
news-image

அதர்வா வெளியிட்ட 'யோலோ' படத்தின் முதல்...

2025-03-24 17:52:11
news-image

'நரி வேட்டை' படத்தில் நடிக்கும் சேரனின்...

2025-03-24 17:46:39
news-image

சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் இரண்டாவது...

2025-03-22 17:06:22
news-image

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ' தி...

2025-03-22 17:01:19
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட '...

2025-03-22 17:01:08
news-image

பேய் கொட்டு - திரைப்பட விமர்சனம்

2025-03-22 16:56:06
news-image

அதர்வா நடிக்கும் ' இதயம் முரளி'...

2025-03-22 16:55:46
news-image

டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்த எம்புரான்...

2025-03-22 16:36:17
news-image

நடிகர் சிரஞ்சீவிக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வாழ்நாள்...

2025-03-22 12:02:21
news-image

ட்ராமா - திரைப்பட விமர்சனம்

2025-03-21 15:57:47
news-image

மாதவன் நடிக்கும் 'டெஸ்ட் ' திரைப்படத்தின்...

2025-03-21 15:57:33