'லேடி சுப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'மூக்குத்தி அம்மன்' எனும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
திருமணத்திற்கு பிறகும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் 'டெஸ்ட்', 'மண்ணாங்கட்டி', 'டியர் ஸ்டூடென்ட்ஸ் ' 'தனி ஒருவன் 2', 'குட் பேட் அக்லி' என எட்டிற்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு - பட தயாரிப்பு நிறுவனத்தால் பிரத்யேக காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும், படத்தில் நடிக்கும் ஏனைய நட்சத்திர நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
டொக்டர் ஐசரி கே கணேஷ் - நயன்தாரா- மூக்குத்தி அம்மன் - ஆடி மாதம் ஆகியவை இணைந்திருப்பதால் இந்த படத்தின் அறிவிப்புக்கு ஆன்மீக அன்பர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM