தயாரிப்பு : பயாஸ்கோப் யு எஸ் ஏ & அகிரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
நடிகர்கள் : பார்த்திபன், யோகி பாபு மற்றும் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கும் பத்திற்கும் மேற்பட்ட வளரிளம் பருவ நடிகர், நடிகைகள்
இயக்கம் : இரா. பார்த்திபன்
மதிப்பீடு: 2.5/5
'ஒத்த செருப்பு ', 'இரவின் நிழல்' என வரிசையாக இரண்டு படைப்புகளின் மூலம் சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்த்த மண்ணின் மைந்தனான இரா. பார்த்திபன் இயக்கத்தில் உருவான 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு இருந்தது. அது முழுமையாக நிறைவேறியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகள் வளரிளம் பருவத்தினருக்கு உரிய கெத்துடன் திரிகின்றனர். இவர்கள் தாங்களும் பெரியோர்கள் தான் என்பதை நிரூபிப்பதற்காக சக மாணவி ஒருவரின் பாட்டி வசிக்கும் ஊருக்கு சாகச சுற்றுலாவாக செல்ல திட்டமிடுகிறார்கள்.
மேலும் அந்த ஊரில் பேய் இருக்கிறது என்பதால் அதனை காண வேண்டும் என்கிற ஆவலில் நண்பர்கள் அனைவரும் இணைந்து பாடசாலைகளில் நடைபெறும் வகுப்புகளை புறக்கணித்து பயணிக்கிறார்கள். சாலை மார்க்கமான பேருந்து பயணத்தில் இடையூறு ஏற்பட.. வேறு வழியில்லாமல் கால்நடையாக அந்த ஊருக்கு செல்ல தீர்மானிக்கிறார்கள். அதன் போது ஏற்படும் விவரிக்க இயலாத அனுபவங்களை சொல்வது தான் 'டீன்ஸ்' திரைப்படத்தின் கதை.
பத்துக்கும் மேற்பட்ட கதையின் நாயகர்களான வளரிளம் பருவத்தை சேர்ந்த நடிகர்களை... பாடல் ஒன்றின் மூலம் தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்தும் பாணி- பார்த்திபனின் டச். ஆனால் அவர்கள் பேசிக்கொள்ளும் வசனங்களில் நாடகத் தனமும், மிகைத்தனமும் அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக பானைகளில் இருக்கும் கள்ளை பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகள் அருந்துவது .. பார்த்திபனின் சமூகப் பொறுப்புணர்வு எங்கே? என கேள்வி கேட்க வைக்கிறது. ஆனால் சமூக வலைதள பக்கத்தில் வளர் இளம் பருவத்தை சேர்ந்த பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகள் பீர் அருந்தும் காணொளிகள் வெளியாகி இருப்பதால்... அவை சம காலகட்டத்திய மாணவ மாணவிகளின் பொது வெளி சமூக நடவடிக்கையின் வெளிப்பாடு என்றும் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் பார்த்திபன் இதனை கவனமாக தவிர்த்திருக்க வேண்டும்.
தங்களுடன் வரும் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக மாயமாக மறைவதும்.. அது ஏன்? எப்படி? என்று புரியாமல் மற்றவர்கள் தவிப்பதும், தாங்களாவது உயிருடன் பயணத்தை தொடர்வோமா? தொடர மாட்டோமா? என்ற குழப்பம் அவர்களிடத்தில் ஏற்படுவதும் சுவராசியமானது. ஆனால் குறைவான கற்பனை திறன் மற்றும் காட்சி மொழியின் காரணமாக ரசிகர்களின் மனதில் இவை எரிச்சலை ஏற்படுத்துகிறது. இருப்பினும் முதல் பாதியின் நிறைவு காட்சியில் பார்வையாளர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்துகிறார் இயக்குநர்.
இரண்டாம் பாதி தொடங்கியவுடன் வானியல் இயற்பியல் விஞ்ஞானியான பார்த்திபனின் கதாபாத்திரம் அறிமுகமாகி, தொலைந்த நண்பர்களின் பின்னணியை அறிவியல் ஆதாரத்துடன் ஏனைய மாணவ மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறார். அத்துடன் வேற்றுக்கிரக வாசிகளால் ஏவப்பட்டு பூமியில் வந்து இறங்கி இருக்கும் அந்த விண்கலம் - மனிதர்களில் ஒருவரை ஆய்வுக்காக கேட்பதும்.. அதற்கு நண்பர்களின் பதிலும்தான் படத்தின் முத்தாய்ப்பான உச்சகட்ட காட்சி.
முதல் பாதியை விட இரண்டாம் பாதி பரவாயில்லை என்றாலும், அது பாமர ரசிகர்களுக்கு புரியும்படி இல்லை என்பதுதான் பெரிய குறை. மாணவ மாணவிகளிடையே.. அமானுஷ்யம் குறித்தும், பேய் குறித்தும், அறிவியல் ரீதியான விழிப்புணர்வு தேவை என்பதை வலியுறுத்த விரும்பிருக்கும் பார்த்திபன்.. அதனை மாணவர்களாலேயே உணரப்பட்டு தெளிவு பெற வைக்காமல்.. இவரே ஒரு கதாபாத்திரமாக தோன்றி, அவர்களை வழிநடத்தி இருப்பது தான் படத்தின் பலம் மற்றும் பலவீனம்.
புதுமுக நடிகர்கள் இளமையுடனும், குறும்புடனும் இருந்தாலும் அய்யன்காளி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பு ரசிகர்களின் மனதை கவர்கிறது.
பாடல்களில் தன் இருப்பை தவறவிட்ட டி. இமான்.. பின்னணி இசையில் அதை நிரூபிக்கிறார். கிறாபிக்ஸ் காட்சிகளில் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும், படைப்பாளிகளின் திரை பங்களிப்பும் எதிரும் புதிருமாக இருக்கிறது.
டீன்ஸ் - காலி டின்ஸ் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM