கென்ய மரதன் ஓட்ட வீரரான லோரன்ஸ் ச்செரோனோவுக்கு 7 ஆண்டு தடை

13 Jul, 2024 | 01:03 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)  

ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக கென்யாவின் மரதன் ஓட்ட வீரரான லோரன்ஸ் ச்செரோனோவுக்கு 7 ஆண்டு கால போட்டித் தடையை தடகள ஒருமைப்பாடுப் பிரிவு விதித்துள்ளது. 

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து போதைப்பொருளை உட்கொண்டமைக்காக 4 ஆண்டு காலமும், முன்னெடுக்கப்பட்ட விசாரணையை தவறாக வழிநடத்த முயற்சித்த குற்றத்திற்காக 4 ஆண்டு காலமும் என ச்சேரோனோ மீது தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் முற்கூட்டியே குற்றத்தை ஏற்றுக்கொண்டதனால் ஓராண்டு காலம் குறைக்கப்பட்டு 7 ஆண்டு காலம் போட்டித் தடை விதிக்கப்பட்டது. 

ட்ரைமெட்டாசிடின் (டி.எம்.இசட். TMZ)  பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, செரோனோவுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதன் காரணமாக அவருக்கான போட்டித் தடை 2022 ஆம் ஆண்டு முதல் இருந்து 2029 ஆம் ஆண்டு வரையான 7 ஆண்டு காலமாக போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, லோரன்ஸ் ச்செரோனோவால் 2029 ஆம் ஆண்டு வரை எந்தவித போட்டியிலும் பங்கேற்க முடியாது. 

வயிற்று வலிக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவர் ஊசிமருந்து அளித்திருந்தார் என குறிப்பிட்டு, முன்னர் வந்த பரிசோதனை முடிவின்  மீது, ச்சேரோனோ குற்றம் சாடியிருந்தார்.  அதன் பின்னர் அது தனது மனைவியின் மருந்து எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இவ்விடயம் தொடர்பில் தடகள ஒருமைப்பாடு பிரிவின் (AIU) தலைவர் பிரட் க்ளோதியர் கூறுகையில், "விதிகளை மீறும் எவருக்கும் தடை விதிக்கப்படும்" என்றார். 

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் கென்யா சார்பாக மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ச்செரோனோ அப்போட்டியில் 4 ஆம் இடத்தை பிடித்திருந்தார். 

லோரன்ஸ் ச்செரோனோ, பொஸ்டன்  மரதன், சிக்காகோ மரதன், வெலன்சியா மரதன் என பல்வேறுபட்ட உலகப் பிரசித்திப்பெற்ற மரதன் ஓட்டப் போட்டிகளில் சம்பியன் பட்டம் பெற்றவர் ஆவார். அவரின் அதிசிறந்த நேரப்பெறுதியாக 2 மணித்தியாலம் 3 நிமிடங்கள் 04 செக்கன்களாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54
news-image

பரபரப்பான போட்டியில் டிபெண்டர்ஸ் அணியை வீழ்த்தி...

2026-08-11 19:15:25
news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40