தலங்கமை கலல்கொட பிரதேசத்தில் உள்ள முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்கவின் வீட்டில் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை திருடிய சந்தேக நபரொருவர் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டாவை பொலிஸார் தெரிவித்தனர்.
தலங்கமை உத்துவன்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடப்பட்டதாக கூறப்படும் மடிக்கணினி, 2 டெப் , 5 கைக்கடிகாரங்கள், 4 கைவளையல்கள், 2 காதணிகள் மற்றும் 10 ஆயிரம் ரூபா பணம் ஆகிய பொருட்கள் சந்தேக நபரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர், கொட்டாவை, தலங்கமை மற்றும் மஹரகம ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளை உடுத்து திருடிய சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் முற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM