(எம்.எம்.சில்வெஸ்டர்)
பெண்களுக்கான உயரம் பாய்தலில் 37 வருட காலமாக இருந்து வந்த உலக சாதனையை 22 வயதான உக்ரைனின் யரோஸ்லாவா மஹுச்சிக் முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டினார்.
உக்ரைனின் உயரம் பாய்தல் வீராங்கனையான யரோஸ்லாவா மஹுச்சிக்,பாரிஸ் டயமண்ட் லீக்கின் பெண்களுக்கான உயரம் பாய்தலில் 2.10 மீற்றர் உயரம் பாய்ந்து புதி உலக சாதனையை படைத்தார்.
கடந்த 1987 இல் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற தடகள போட்டியின் பெண்களுக்கான உயரம் பாய்தலில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஸ்டெப்க்கா கொஸ்ட்டாடினோவா (Stefka Kostadinova) 2.09 மீற்றர் உயரம் பாய்ந்து உலக சாதனை நிகழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், பாரிஸ் டயமண்ட் லீக்கில் கடந்த ஞாயிறன்று (07) பங்கேற்றிருந்த உக்ரைனின் யரோஸ்லாவா மஹுச்சிக் மற்றும் உள்ளக சம்பியன் வீராங்கனையாக திகழும் அவுஸ்ரேலியாவின் நிக்கோலா ஒல்யஸ்லேகர்ஸ் இருவரும்
2.01 மீற்றர் உயரத்தை முதலில் பாய்ந்தனர். அதன் பின்னர், 2.03 மீற்றர் உயரத்தை யரோஸ்லாவா மஹுச்சிக் முதல் முயற்சியிலேயே பாய்ந்திருந்தபோதிலும், நிக்கோலா ஒல்யஸ்லேகர்ஸ் தனது 3 முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவினார்.
இதையடுத்து, 2.07 மீற்றர் உயரம் பாய்ந்து உக்ரைன் சாதனை ஏற்படுத்திய யரோஸ்லாவா மஹுச்சிக், 2.10 மீற்றர் உயரத்தை தனது முதல் முயற்சியிலேயே பாய்ந்து, 37 வருட கால உலக சாதனையை முறியடித்தார். இந்த வெற்றியின் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான உயரம் பாய்தலில், யரோஸ்லாவா மஹுச்சிக் தங்கம் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சாதனை ஏற்படுத்தியமை குறித்து யரோஸ்லாவா மஹுச்சிக் தெரிவித்துள்ளதாவது,
"இப்போட்டிக்கு வரும்போது 2.07 மீற்றர் உயரத்தை பாய முடியும் என்ற முழு நம்பிக்கை இருந்தது. எனினும், 2.10 மீற்றர் உயரத்தையும் பாய முடியும் என்ற சிறியளவிலான நம்பிக்கையும் எனக்குள் இருந்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. தடகள உலகில் எனது நாட்டின் பெயரை பொறித்துள்ளேன் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்"என்றார்.
யரோஸ்லாவாவின் உலக சாதனை குறித்து உக்ரைன் நாட்டு ஜனாதிபதி வொலொட்மிய்ர் ஸெலன்ஸ்கி தனது X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எமது நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் வெற்றிகளை ஈட்டிக்கொடுத்ததற்கும், உக்ரைன் நாட்டு தேசியக் கொடியை மிக உயரத்தில் பறக்க விட்டதற்கும், உமக்கு நன்றி யரோஸ்லாவா. இது போன்ற வெற்றிகள் எமது நாட்டு மக்களுக்கு தைரியத்தையும் ஒற்றுமையைும் ஏற்படுத்தும் என, அவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM