டட்டூவை மையப்படுத்தி தயாராகும் 'லவ் இங்க்'

13 Jul, 2024 | 11:08 AM
image

'வலிமை' திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்கள் இடத்தில் பிரபலமான நடிகர் ராஜ் அய்யப்பா கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு 'லவ் இங்க்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில் உருவாகும் 'லவ் இங்க்' எனும் திரைப்படத்தில் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ், வி டி வி கணேஷ், யோகி பாபு, திலீபன், முனீஸ்காந்த், ஹர்ஷத், 'பட்டிமன்றம்' ராஜா, வினோதினி, மாறன், சுபாஷினி கண்ணன், கே பி ஒய் வினோத், டி எஸ் ஜி, பிரீதா, வினோத் முன்னா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ. எஸ். அர்ஜுனா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை எம் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேந்திரன் ஆதிகேசவன் தயாரிக்கிறார். 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் மத்தியில் 'லவ் இங்க்' என்ற சொல் பிரபலம். தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை இவர்கள் டாட்டூவாக வரைந்து அவர்கள் மீதான காதலை வெளிப்படுத்திக் கொள்வர்.  

காதலர்களும் தங்களது காதலின் வலிமையை-  அன்பின் மேன்மையை வெளிப்படுத்த இத்தகைய லவ் இங்க் மூலம் டாட்டூவாக வரைந்து கொள்கிறார்கள். இதன் சுவாரசியமான பின்னணியை விவரிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை. இப்படத்தின் படப்பிடிப்பை மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதில் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியிருக்கிறது ''  என்றார்.

   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்