bestweb

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப் ' படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

13 Jul, 2024 | 10:51 AM
image

சின்னத்திரை தொகுப்பாளராகவும் ,  நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வந்த ஆர் ஜே விஜய் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'வைஃப் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌ 

அறிமுக இயக்குநர் ஆர். ஹேமநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வைஃப் ' எனும் திரைப்படத்தில் ஆர் ஜே விஜய், அஞ்சலி நாயர், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் கே. ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருப்பதாகவும், விரைவில் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் படக் குழுவினர்.. விரைவில் இப்படத்தில் டீசர், ட்ரெய்லர், இசை வெளியீடு உள்ளிட்ட புதிய தகவல்களை வெளியிடுவோம் என்றும் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்