பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் 'பிம்ஸ்டெக்'கின் பங்கு அளப்பரியது : இந்தியப் பிரதமர் மோடி !

13 Jul, 2024 | 10:54 AM
image

“பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் இயந்திரமாக 'பிம்ஸ்டெக்' அமைப்பு செயல்படுகிறது,” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய ஏழு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை 'பிம்ஸ்டெக்' எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு ஒன்றிணைக்கிறது.  

இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு இந்தியாவின் புதுடில்லியில் கடந்த 11 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகியது. 

மாநாட்டின் நிறைவு நாளான 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.  

பிம்ஸ்டெக் மாநாட்டடில் கலந்துகொள்ள வந்திருந்த இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய உள்ளிட்ட ஏனைய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

இதுகுறித்து இந்தியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

போக்குவரத்து இணைப்பு, எரிசக்தி, வர்த்தகம், சுகாதாரம், விவசாயம், அறிவியல், பாதுகாப்பு, மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றில் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து, அமைச்சர்கள் குழுவுடன் இந்தியப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் இயந்திரமாக பிம்ஸ்டெக் அமைப்பு செயல்படுவதாக அவர் தெரிவித்தார். 

அமைதியான, வளமான, பாதுகாப்பான பிம்ஸ்டெக் பிராந்தியத்திற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் கொள்கையையும், கிழக்கத்திய நாடுகள் தொடர்பான கொள்கையையும் விவரித்த பிரதமர், இந்தியாவின் கொள்கைகள் இந்த மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை உடையது என எடுத்துரைத்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் மோடி, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள இந்த அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48