போட்டிகளும், சவால்களும் நிறைந்த இன்றைய சூழலில் பெண்மணிகளும் அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது.
மேலும் அவர்கள் தங்களது தோற்ற பொலிவிற்கு கூடுதலான முக்கியத்துவம் தரவேண்டிய கட்டாயமும் உள்ளது.
இதனால் தற்போது நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்மணிகளும், ஆண்களும் தங்களது தோற்ற பொலிவு குறித்து கவலை கொள்கின்றனர்.
மேலும் பணி சுமை காரணமாகவும், தொடர்ச்சியான டிஜிட்டல் திரைகளை பார்வையிட்டு பணியாற்ற வேண்டிய கட்டாய சூழல் இருப்பதாலும் கண்கள்- கண் இமைகள்- கண்களுக்கு கீழே கருவளையம் - இமைகளில் கூடுதல் தோல் வளர்ச்சி மற்றும் கொழுப்பு ஆகியவை உண்டாகி தன்னம்பிக்கையை சீர்குலைக்கிறது.
இந்நிலையில் கண் இமைகள், கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் போன்ற சில பாதிப்புகளை நீக்குவதற்கு பிளெபரோபிளாஸ்ரி எனும் சத்திர சிகிச்சை பலனளித்து வருவதாக பைத்தியம் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
முதுமையின் காரணமாக எம்மில் பலருக்கு கண் இமைகள் இயல்பானதை விட கூடுதலாக நீட்சி அடைவதால் அங்குள்ள தசைகள் பலவீனமடைகின்றன.
இதன் காரணமாக இமைகளில் அதிகப்படியான தோல் மற்றும் கொழுப்பு சேகரமடைகிறது. இது புருவங்களுக்கு தொய்வை ஏற்படுத்துகிறது.
மேலும் மேல் இமை மற்றும் கீழ் இமைகளுக்கும், கண்களுக்கு கீழே கருவளையங்களையும், கண்களுக்கு கீழே கூடுதல் கொழுப்புகளையும் சேர்த்து அவலட்சணத்தையும், ஆரோக்கிய கேட்டையும் உண்டாக்குகிறது. சிலருக்கு இத்தகைய நிலை ஏற்படுவதன் காரணமாக பக்க பார்வையையும் இழக்கிறார்கள்.
சீரற்ற மேல் கண் இமைகள், புற மற்றும் பக்க பார்வையை பாதிக்கும் மேல் கண் இமைகள், கீழ் கண் இமைகளில் இயல்பான அளவைவிட கூடுதலான தோல், கருவளையம், புருவத்தை உயர்த்தும் போது சமச் சீரற்ற தன்மை... போன்ற பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டால் அவர்கள் பிளெபரோபிளாஸ்ரி எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் பெறலாம்.
இத்தகைய சிகிச்சை அழகியல் தொடர்பான சத்திர சிகிச்சை என்பதால் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
மேலும் இத்தகைய நவீன சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கும் முன் வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளையும், முன் வைக்கும் ஆலோசனைகளையும் உறுதியாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு உங்களுடைய கண் இமைகளின் தோற்றம் பொலிவு பெறும். மேலும் கரு வளையங்களும், கண்களுக்கு கீழ் இமையில் பகுதியில் சேகரிக்கப்பட்டிருந்த கூடுதல் கொழுப்புகளும், தோல்களும் அகற்றப்படும்.
இதனூடாக உங்களது முக அமைப்பு பொலிவு பெறும். மேலும் பக்கப் பார்வை குறைபாடு நீங்கி இரு பக்கமும் தெளிவாக தெரியும். மேலும் இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் விடயங்களை தீவிரமாகவும், உறுதியாகவும் பின்பற்ற வேண்டும்.
வைத்தியர் சிவக்குமார் - தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM