(நெவில் அன்தனி)
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் 2,000க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகளின் திறமைகளைப் பரீட்சிக்கும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப், தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இன்று முதல் 16ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் 15, 18, 20, 23 வயதுக்குட்பட்ட இருபாலாருக்கும் நடத்தப்படும். இந்த நான்கு வயது பிரிவுகளிலும் 100க்கும் மேற்பட்ட போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இப் போட்டிகள் உலக கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்புக்கான திறன்காண் போட்டியாகவும் அமையவுள்ளதால் கனிஷ்ட வீரர்கள் அனைவரும் பங்குபற்றுவது கட்டாயம் என ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் தலைவர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
பெரு தேசத்தின் லீமா தேசிய விளையாட்டரங்கில் உலக கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 27ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
ஆறு மெய்வல்லுநர்கள் ஏற்கனவே உலக கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிக்கான அடைவு மட்டத்தை எட்டியுள்ளபோதிலும் அவர்கள் உட்பட கனிஷ்ட மெய்வல்லுநர்கள் அனைவரும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு தமது திறமையை வெளிப்படுத்தவேண்டும் என ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இதனைவிட உலக கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் தொடர் ஓட்ட அணிகளை பங்குபற்றச் செய்வதற்கு ஸ்ரீலங்கா அத்லெட்டிஸ் முயற்சித்து வருகிறது.
இதன் காரணமாக 100 மீற்றர், 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் அதிசிறந்த நேரப் பெறுதிகளைப் பதிவு செய்யும் 20 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு புரிம்பமாக திறன்காண் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இது இவ்வாறிருக்க, மெரோன் விஜேசிங்க (100 மீற்றர் - ஆண்கள்), இந்துசர விதுஷான் (200 மீற்ற் ஸ்ரீ ஆண்கள்), ஜத்ய கிருல (400 மீற்றர் - ஆண்கள்), அயோமல் அக்கலன்க (400 மீற்றர் சட்டவேலி ஓட்டம் - ஆண்கள்), லெசந்து அர்த்தவிது (உயரம் பாய்தல் - ஆண்கள்), மதுஷானி ஹேரத் (முப்பாய்ச்சல் - பெண்கள்) ஆகிய அறுவரே உலக கனிஸ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்புக்கான அடைவு மட்டத்தை எட்டியவர்களார்.
ஆசிய கனிஷ்ட மற்றும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் வெளிப்படுத்திய ஆற்றல்கள் அடிப்படையிலேயே அவர்கள் அறுவரும் உலக கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்புக்கான அடைவு மட்டத்தை எட்டியுள்ளனர்.
எனினும் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளிலும் அவர்கள் உலக கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளுக்கான அடைவு மட்டத்தை எட்டுவது அவிசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM