முத்து விநாயகரின் 60 பவுண் நகைகள் மாயம் ; நீதி கேட்டு தேங்காய் உடைத்து மக்கள் போராட்டம்

Published By: Digital Desk 3

12 Jul, 2024 | 03:55 PM
image

ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் புளியங்கூடல் சந்தியில் இருந்து ஆரம்பமான பேரணி பிரதான வழியாக முத்து விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.

ஆலயத்தின் முகவாயிலில், பிள்ளையாரின் நகை பணம் திருடியவனை வீதிக்கு கொண்டுவா என கோஷங்களை எழுப்பியவாறு ஆண், பெண் இருபாலரும் சிதறு தேங்காய் உடைத்தனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதிநாள் ஆலயத்தின் பணப்பெட்டித் திறப்பு தொலைந்து விட்டதாக தலைவரால் சிலருக்கு தெரிவிக்கப்பட்டது. 

எனினும்  உடனடியாக பொலிசாருக்கோ உபயகாரர்களுக்கோ ஆலயத்தின் தலைவரால் தகவல் வழங்கப்படவில்லை. 

சில நாட்களின் பின்னர் குறித்த பணப் பெட்டியில் இருந்த நகைகள்  பணங்கள் என்பன காணாமல் போன தான தகவல்கள் சமூகத்தில் பரவ ஆரம்பித்தது. 

ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து குறித்த விடயம் தொடர்பில் தலைவரிடம் வினவிய மக்கள்  பூட்டு உடைக்கப்படாமல் எவ்வாறு பெட்டியில் இருந்த நகைகள் பணங்கள் காணாமல் போனது என கேள்வி எழுப்பிய போது அவர் தனக்கு தெரியாது என பதிலளித்தார். 

எமது ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒரு திருட்டு சம்பவமாக கருதும் நிலையில் குறித்த நகைகளையும் பணங்களையும் திருடியவர்கள் ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்கள் தான் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் திறப்பை காணவில்லை என்றபோது எல்லோரையும் அழைத்து குறித்த பெட்டியை உடைத்து அதில் இருந்த நகைகள் பணங்களை  ஆலய நிர்வாகம் எடுத்து பாதுகாப்பாக வேறொரு திறப்பை போட்டிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

ஆதலால் குறித்த களவானது ஆலய நிர்வாகத்திற்கு தெரிந்து இடம் பெற்றிருக்க கூடும் என்பது எமது சந்தேகமாக இருக்கம் நிலையில் பொலிசார் கால இழுத்தடிப்பைச் செய்யாமல் உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த விடயம்  தொடர்பில் ஊர்காவற் துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட போது குறித்த ஆலயத்தில் நகை பணம் காணாமல் போன தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45
news-image

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக...

2025-03-20 17:40:56
news-image

கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியல் சிகிச்சைகள் ஸ்தம்பிதம்

2025-03-20 17:39:42
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 17:28:26
news-image

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பு...

2025-03-20 17:39:18
news-image

அலோசியஸிடமிருந்து நிதிபெற்ற அரசியல்வாதிகளின் பட்டியல் விரைவில்...

2025-03-20 15:19:36
news-image

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார்...

2025-03-20 16:52:31
news-image

நுவரெலியா மாவட்டத்தில் வேட்பு மனுவை தாக்கல்...

2025-03-20 17:42:10
news-image

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவிற்கு பயணத்தடை

2025-03-20 17:27:21
news-image

யாழில் 11 கட்சிகளும் 27 சுயேட்சை...

2025-03-20 17:37:44