யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் செவ்வாயன்று இலங்கை வருகிறார்

12 Jul, 2024 | 04:32 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் கல்வியியல், விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இடம்பெறவுள்ள இவ்விஜயத்தின்போது யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.

இதன்போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரைச் சந்தித்து இலங்கைக்கான ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்துதல் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.

அதேவேளை இலங்கை யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு கொழும்பிலுள்ள நெலும் பொக்குனவில் நடைபெறவிருக்கும் நிகழ்விலும் அவர் பங்கேற்பவுள்ளார்.

அதுமாத்திரமன்றி யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையிலுள்ள இடங்களுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் வாக்குகளை மிரட்டி பெற முயற்சிக்கும்...

2024-11-04 20:17:28
news-image

குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட...

2024-11-04 20:04:49
news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி...

2024-11-04 18:59:16
news-image

பாராளுமன்றத்துக்குள் குண்டு வீசியவர்கள் பாராளுமன்றத்தை விரமசிப்பதற்கு...

2024-11-04 16:36:23
news-image

தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு...

2024-11-04 19:00:11
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,535...

2024-11-04 18:30:17
news-image

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கு தேசிய...

2024-11-04 18:21:51
news-image

பாணந்துறை - ஹொரனை பிரதான வீதியில்...

2024-11-04 18:07:53
news-image

முச்சக்கரவண்டி - கார் மோதி விபத்து...

2024-11-04 17:52:05
news-image

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நாம் பெரும்பான்மை...

2024-11-04 17:58:16
news-image

மலையக மக்களின் உரிமைகளை போராடியே பெறவேண்டியுள்ளது...

2024-11-04 18:18:37
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2024-11-04 17:33:45