நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை, இந்தியாவிற்கு வழங்கும் ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவிற்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இஸ்ரேல் விண்வெளி தொழிநுட்பக மையம் அறிவித்துள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின் மூலம் முதல் கட்டமாக குறுந்தூர மற்றும் நடுத்தர ஏவுகணைகளும், பின்னர் தொலைதூர தாக்குதல் ஏவுகணைகளை இஸ்ரேலிடமிருந்து இந்திய பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

மேலும் குறித்த ஏவுகணை பாகங்களை இஸ்ரேலின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனமான ரபேல் வடிவமைத்து கொடுப்பதோடு, இருநாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு புரிந்துணர்வை மேலோங்க செய்வதற்காக செயற்படவுள்ளதாக, இஸ்ரேல் விண்வெளி ஆய்வகத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி ஜோசப் வெஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இஸ்ரேலின் குறித்த ஒப்பந்தத்தின் மூலம் உலகின் தலைசிறந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருப்பதோடு, குறித்த திட்டத்தில் லார்சன் மற்றும் டவுப்ரோ ஆகிய இந்திய பாதுகாப்பு நிறுவனங்களும் பங்கு வகிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.