ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த பெண் உறுப்­பினர் ஒருவர், சிரி­யாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு மத ரீதி­யான ஆடை­களை அணியத் தவ­றிய குற்­றச்­சாட்டில் சித்­தி­ர­வதை செய்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்றன.

இது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் சனிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ ளன.மேற்­படி 21 வய­தான யுவதி மத முறைப்­படி உடலை மூடி ஆடை அணி­யாது செல்­வதைக் கண்ட ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த ஒவும் பாரூக் என்ற பெண் உறுப்­பினர், அவரை அடித்து உதைத்து சித்­தி­ர­வதை செய்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­ய­தாக அவ­ரது குடும்­பத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அரா நியூஸ் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.