சட்ட விரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச் சென்ற பொலேரோ ரக கெப் வண்டி ஒன்றை 9 மாடுகளுடன் இன்று (12) காலை பதுளை மஹியங்கனை வீதி 15 ம் கட்டை பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மங்கள திஸாநாயக்கவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸ் குழுவொன்று இன்று அதிகாலை 2.30 மணியளவில் வீதி தடைகளை அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வாகனத்தை வழிமறித்துள்ளனர்.
இதன்போது வாகனத்தில் வந்த சந்தேக நபர்கள் வீதி தடைகளை கண்டு வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளதோடு, சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனத்தில் 3 பசு மாடுகளும் 6 கன்றுகளும் இருந்ததாகவும் அதில் ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை மாவட்ட பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயவர்தன ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கந்தகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மங்கள திஸாநாயக்க தலைமையில் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM