இந்திய கடலோர பாதுகாப்புக் குழுவினரால்  கைதுசெய்யப்பட்ட 7 இலங்கை மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கடலோர பாதுகாப்புக் குழுவினரால் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்களும் கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்டு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே குறித்த மீனவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை சென்னை புழல் சிறையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.