2017ஆம் ஆண்டுக்கான கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விழா, நாளை எட்டாம் திகதி சனிக்கிழமை பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில், மட்டக்களப்பு, வந்தாறுமூலை, கல்லடி, திருகோணமலை வளாக உள்வாரி, வெளிவாரி மாணவர்களில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவிருந்தன.

நான்கு அமர்வுகளாக நடைபெறவிருந்த இந்த விழாவில், வைத்தியத் துறை, சித்த வைத்தியத் துறை, கலை, கலாசாரத் துறை மற்றும் விவசாயத் துறையைச் சேர்ந்த 852 பேருக்குப் பட்டம் வழங்கப்படவிருந்தது.