சித்தர்களின் ஆசியையும் அருளையும் பெறுவதற்கு எளிய வழிமுறைகள்..?

Published By: L. Abhilashani

11 Jul, 2024 | 05:36 PM
image

எம்மில் பலரும் நாளாந்தம் பல்வேறு சங்கடங்களையும் சொல்லொனா துயரத்தையும் எதிர்கொள்கிறோம். மேலும் நாளாந்தம் இறை வழிபாட்டிலும் ஈடுபட்டு, மனமுருக பிரார்த்திக்கிறோம் .குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும், குடும்ப உறுப்பினர்களின் நலன்களுக்காகவும் அயராது பாடுபடுகிறோம்.

ஆனாலும் முன்னேற்றம் என்பது சிறிதும் ஏற்படாமல் ஒரே இடத்திலேயே தேக்கமடைந்து நிற்கிறோம். இது தொடர்பாக என்றாவது ஒரு நாள் எம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளும் போது  துணை வினாவாக நாம் யார்? என்ற வினா எழும். அந்தத் தருணம் தான் நாம் இறைவனை நோக்கி பயணிக்க தொடங்கும் முதல் புள்ளி.

இது அனைவருக்கும் சாத்தியமாகும் என்பது புரியாத புதிர். ஏனெனில் எம்மில் பலரும் இந்த புற உலகில் உள்ள சுஹானுபவங்கள் மீது அதீத பற்று கொண்டு அதனுள் உழல்கிறார்கள். அதனையே தங்களின் வாழ்க்கைக்கான பற்றுக்கோடாகவும் நிர்ணயித்து கொள்கிறார்கள். இவர்களுக்கு இறைவனின் அருளும் கிடைப்பதில்லை. இறைவனுக்கு நிகராக இருக்கும் சித்தர்களின் ஆசிகளும் கிடைப்பதில்லை.

சித்தர்கள் என்றவுடன் எம்மில் பலரும் அவர்களுடைய ஜோதிட நிபுணர்கள் பரிந்துரைத்த ஜீவ சமாதிகளுக்கு ஒரு முறையோ அல்லது சில காலம் வரை தொடர்ந்து பயணித்திருப்பார்கள். சிறிது காலம் கழித்து ஜீவசமாதிகளுக்கும் சென்று வழிபட்டிருக்கிறேன். ஆனால் அங்கும் எனக்கு வழி பிறக்கவில்லை என புலம்புவதை கண்டிருப்போம்.  ஆனால் சித்தர்கள் தம்மை நாடி வந்த பக்தர்களுக்கு மனிதர்களுக்கு ஆசியும், அருளும் வழங்க தயாராகவே இருக்கிறார்கள்.

இந்த தருணத்தில் எம்மில் சிலருக்கு சித்தர்களை வணங்கும் முறை குறித்து ஐயப்பாடு எழலாம். ஏனெனில் இவர்கள் பரிகாரத்திற்காக ஆலயத்திற்கு சென்று அந்த ஆலயத்தில் மேற்கொள்ளப்படும் நியமங்களை உறுதியாக கடைப்பிடித்து இறைவனை வழிபடுபவர்கள். அதனால் சித்தர்களுக்கான வழிபாட்டு முறை குறித்தும் விவரித்தால்...! அதனை அவர்கள் இறுக பற்றி கொண்டு சித்தர்களை நோக்கி தங்களது பிரார்த்தனைகளையும் கோரிக்கைகளையும் சமர்ப்பித்து வாழ்க்கையில் வெற்றியை காண்பர்.

உங்களது குடும்ப ஜோதிடர்களிடமோ அல்லது ஆன்மீக பெரியோர்களிடமோ உங்களுக்கான வழிபட வேண்டிய சித்தர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொள்ளுங்கள். இது கடினம் என்றால் உங்களின் மனதிற்கு பிடித்த சித்தரை வழிபடலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் :

நீங்கள் விரும்பும் சித்தரின் உருவப்படங்கள், உருவப்படங்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை என்றால் அதற்காக வருத்தப்படாதீர்கள். மனதில் அந்த சித்தரை உருவகித்துக் கொள்ளுங்கள். ஒரு கோப்பை பால் - கடலை மிட்டாய்-  எள்ளுருண்டை -அச்சு வெல்லம் - ஊதுபத்தி. அகல் விளக்கு - நெய் அல்லது நல்லெண்ணெய் -திரி -தீப்பெட்டி.

நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் சித்தரை நினைத்து ஒரே ஒரு அகல் விளக்கினை ஏற்றுங்கள். அவர் முன் சிறிது அச்சு வெல்லம் அல்லது எள்ளுருண்டை அல்லது கடலை மிட்டாய் அல்லது ஒரு கோப்பை பால் இவற்றில் எது உங்களிடத்தில் இருக்கிறதோ அதனை சித்தர் மற்றும் விளக்கிற்கு அருகே வைத்து, அவரை மனதில் தியானித்து..‌ ''சித்தர் பெருமானே! எனக்கு இந்தந்த பிரச்சனை உள்ளது. இதற்கு நீங்கள் தான் தீர்வளிக்க வேண்டும் '' என அவரிடம் சரணாகதி அடைந்து பிரார்த்தனை செய்யுங்கள்.

உங்களது பிரார்த்தனை விரைவில் நிறைவேறுவதை அனுபவத்தில் காண்பீர்கள். உங்களது கோரிக்கை நிறைவேறிய உடன் தவறாது உங்களது சித்தர் வழிபாட்டினை தொடரவேண்டும். மேலும் அமாவாசை , பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் உங்களின் வீட்டிற்கு அருகில் இருக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று அங்கும் தியானத்தில் ஈடுபடலாம்.

அங்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம் அல்லது அங்குள்ள நிர்வாகத்தினர் அன்னதானம் செய்தால் அதில் உங்களுடைய பங்களிப்பையும், உடல் உழைப்பையும் வழங்கலாம்.‌ இதுபோன்ற வழிபாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது உங்களுடைய முன்னேற்றத்திற்கு சூட்சமமான தடையை ஏற்படுத்திய மாய சக்திகள் விலகி , நீங்கள் முன்னேறுவதை அனுபவத்தில் உணரலாம். இதுதான் சித்தர்களை வழிபடுவதன் மூலம் கிடைக்கும் சுப பலன் என்றும் குறிப்பிடலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண தட்டுப்பாடு இன்றி நீடித்திருக்க!

2026-09-12 15:08:31
news-image

கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக...

2026-09-11 17:01:21
news-image

சாய் பாபா வழிபாடு - சில...

2026-09-10 14:24:41
news-image

கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூட்சமக் குறிப்பு..!

2026-09-09 15:43:34
news-image

பணியிடத்தில் உண்டாகும் நெருக்கடிக்கான நிவாரணம்..!?

2026-09-08 17:07:00
news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58