எம்முடைய இல்லங்களில் சுப நிகழ்வுகளின் போது மெழுகு திரியை ஏற்றுவோம். மேலும் எம்முடைய வாழ்க்கை முறையில் இறைவழிபாடு, தியானம், நினைவாற்றல் மேம்பாடு போன்றவற்றிற்காக மெழுகு திரியை பயன்படுத்துவோம். மேலும் சிலர் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக தேவாலயங்களிலும், புத்த விகாரங்களிலும் மெழுகு திரியை ஏற்றி பிரார்த்திப்பதைக் கண்டிருப்போம்.
இத்தகைய மெழுகு திரி தற்போது ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் மூலப் பொருட்களால் உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்யப்படுவதால் இதனூடாக மக்களுக்கு நுரையீரல் தொற்று மற்றும் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
பல நூற்றாண்டுகளாக எம்முடைய வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத நிலையில் இடம் பிடித்திருக்கும் மெழுகு திரி தற்போது இயற்கையான முறையில் அல்லது ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் உற்பத்தி செய்யாமல் வணிக நோக்கத்திற்காக பாரஃபைன் ( Paraffin) மற்றும் பேதலெட்ஸ் ( Pathalates) எனும் பெற்றோலியப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இத்தகைய மெழுகு திரியை எம்முடைய வீடுகளில் ஏற்றும் போது, உள்ளரங்க காற்று மாசு உண்டாகிறது. இதனை தொடர்ந்து பாவிக்கும் போது உள்ளரங்க காற்று மாசு காரணமாக எம்முடைய சுவாசத்தில் பாரிய பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு இதன் காரணமாகவே நுரையீரல் தொற்று பாதிப்பும், நுரையீரல் புற்றுநோய் பாதிப்பும் ஏற்படக்கூடும்.
அதிலும் குறிப்பாக பிள்ளைகள் மற்றும் முதியவர்கள் இருக்கும் வீடுகளில் இத்தகைய பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உண்டு. அதனால் இத்தகைய உடலின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் மெழுகு திரியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அதே தருணத்தில் சோயா பீன்ஸ் எனப்படும் பொருளிலிருந்து தயாரிக்கப்படும் மெழுகு திரியை பயன்படுத்தலாம். இது இயற்கையான முறையிலும் புதுப்பிக்கத்தக்க எரி பொருளாகவும் பயன்படுகிறது. இந்த மெழுகு திரியின் உற்பத்தியின் போது சோயாஃபீன் எண்ணையை ஹைட்ரஜனேற்றம் செய்து மெழுகு திரியை உருவாக்குகிறார்கள்.
இவை நச்சுக்கள் மற்றும் ரசாயனங்கள் கலக்கப்படாதவை. மேலும் இத்தகைய மெழுகுதிரி விரைவில் மக்கும் தன்மை கொண்டது. சந்தையில் கிடைக்கும் பாரஃபின் எனும் பெற்றோலிய துணை தயாரிப்புகளிலிருந்து உருவாக்கப்பட்ட மெழுகு திரியை விட குறைவான கார்பன் அளவை கொண்டவை இவை. இதன் காரணமாக சந்தையில் கிடைக்கும் சோயா வேக்ஸ் மெழுகு திரியை வாங்கி பயன்படுத்தலாம் என சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இவற்றை எம்முடைய இல்லங்களில் ஏற்றும் போது உள்ளரங்க காற்று மாசு மிக மிக குறைவாகவே உண்டாகிறது. இதனால் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றும் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதே தருணத்தில் நீங்கள் வாங்கும் சோயா வாக்ஸ் மெழுகு திரிகள் இயற்கையானதுதானா..! அல்லது அதனுடன் வேறு ஏதேனும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதா? என்பதனை உறுதிப்படுத்திக் கொண்டு, வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
வைத்தியர் ஸ்ரீ தேவி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM