வெளியீட்டு திகதியை அறிவித்த விஜய் ஆண்டனியின் 'மழை' பிடிக்காத மனிதன் படக் குழு

Published By: Digital Desk 7

11 Jul, 2024 | 06:06 PM
image

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் ஆண்டனி எக்சன் ஹீரோவாக நடித்திருக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, சத்யராஜ், சரத்குமார், டாலி தனஞ்ஜெயா, மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி- அச்சு ராஜாமணி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பி பிரதீப் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஜூலையில் வெளியிட திட்டமிடப்பட்ட இந்த திரைப்படம் பொருத்தமான வெளியீட்டு திகதி கிடைக்காததால் ஓகஸ்ட் இரண்டாம் திகதியன்று இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகிறது.

இந்தத் திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றால் மட்டும் தான் விஜய் ஆண்டனியின் சந்தை மதிப்பு நீடிக்கும் என திரையுலக வணிகர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி'...

2025-03-19 16:02:24
news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-19 16:06:28
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23