ஜோசப் ஸ்டாலின் உட்பட தொழிற்சங்க தலைவர்கள் பயங்கரவாதிகளே - காஞ்சன கடும் விசனம்

Published By: P. Saranya

11 Jul, 2024 | 06:02 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அப்பாவி மக்களை பணயக் கைதிகளாக வைத்து தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஜோசப் ஸ்டாலின் உட்பட புகையிரத தொழிற்சங்க தலைவர்களை பயங்கரவாதிகள் என்றே குறிப்பிட வேண்டும். சேவையில் இருப்பவர்களுக்கு சம்பளம் வழங்குவது பெரும் போராட்டமாக உள்ள நிலையில் புதிதாக எவ்வாறு நியமனங்களை வழங்க முடியும். முறையற்ற வகையில் செயற்படும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை எடுக்காவிடின் நாடு என்ற ரீதியில் முன்னேற முடியாது. எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கும் இந்நிலைமையே ஏற்படும் என  மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11)  இடம்பெற்ற சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

தேர்தலை பிற்போட அரசாங்கம் சூழ்ச்சி செய்வதாக எதிர்தரப்பினர் கடந்த காலங்களில் தேர்தலை பிற்போடுவதற்கு செய்த சூழ்ச்சிகளை மறந்து விட்டார்கள். உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது குறித்து எதிர்க்கட்சியினர் சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டு வந்தனர்.ஜனாதிபதி தேர்தலுக்கு  வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.ஜனாதிபதாயின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் என சட்டத்துறை தலைமையதிபதி உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்.இவ்வாறான பின்னணியில் நாட்டு மக்களின் கவனத்தை திசைத்திருப்பவே  எதிர்க்கட்சியினர் இந்த பிரேரணையை கொண்டு வந்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலை பிற்போட அமைச்சரவை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் காணப்படும் சிக்கலை தீர்ப்பதற்காகவே யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து தொழிற்சங்கத்தினர் தற்போது முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பினால் தேர்தல் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கும்  பணிப்புறக்கணிப்பின் பின்னணியில்  குறுகிய நோக்கங்களே காணப்படுகின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயாராகவுள்ளோம். தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுத்துள்ளோம்.வெற்றிப் பெறுவதற்கான கட்டமைப்பை வகுத்துள்ளோம். தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கும் வரை பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கும் பணிகளை தொடர்வோம். ஆகவே தேர்தல் குறித்து எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம். தேர்தலை பிற்போடுவதற்கு கையுயர்த்தும் பழக்கம் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளதே தவிர எமக்கு கிடையாது.

தொழிற்சங்க போராட்டங்களினால்  தேசிய பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விசேட கவனம் செலுத்த  வேண்டும். தொழிற்சங்கத்தினரது நியாயமற்ற கோரிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். முறையற்ற வகையில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுவேன். அரசியல் நோக்கத்துடன் செயற்படும் இவர்கள் பயங்கரவாதிகள் போல் செயற்படுகிறார்கள்.

விடுதலை புலிகள் அமைப்பை போன்று அப்பாவி மக்களை பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு தொழிற்சங்கத்தினர்  தமது கோரிக்கைகளை வெற்றிக் கொள்ள  முயற்சிக்கிறார்கள். வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்குமாறு கோரிக்கைளை முன்வைத்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள். சேவையில் இருப்பவர்களுக்கு சம்பளம் வழங்குவது பெரும் போராட்டமாக உள்ள நிலையில் எவ்வாறு புதிய நியமனங்களை வழங்குவது.

ஆசிரியர் தொழிற்சங்கவாதியான ஜோசப் ஸ்டாலின் நடுத்தர மக்களையும்,மாணவர்களையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார். இவரை பயங்கரவாதி என்றே குறிப்பிட வேண்டும். புகையிரத சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு எதிராகவே தொழிற்சங்கத்தினர் செயற்படுகிறார்கள். இதற்கு எதிராக கடுமையான தீர்மானங்களை எடுக்காவிட்டால் நாடு  என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24
news-image

பாதுகாப்பு பிரதானிகளின் பணியாட்தொகுதித் தலைமைப் பதவியை...

2026-09-09 16:28:09
news-image

கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதில் ஏன்...

2026-09-09 17:44:22
news-image

பெருந்தோட்டச் சமூகத்தின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்களை...

2026-09-09 16:28:56
news-image

பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு 15...

2026-09-09 17:38:30
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கையிடம் வெளிப்படைத்தன்மையுடனான அர்ப்பணிப்பு...

2026-09-09 19:45:08
news-image

16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகள்...

2026-09-09 16:30:03
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் அரசாங்கம்...

2026-09-09 16:42:49
news-image

செம்மணி தொடர்பில் இலங்கை அரசின் தலையீடற்ற...

2026-09-09 19:43:56