(ஆர்.சேதுராமன்)
பிரான்ஸின் தேசிய றக்பி அணி வீரர்கள் இருவர் பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக ஆர்ஜென்டீனாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒஸ்கார் ஜேகு (21), ஹியூகோ ஓ ராதோ (20) ஆகிய இரு வீரர்களும் ஆர்ஜென்டீன தலைநகர் புவ.னேஸ் அயர்ஸில் திங்கட்கிழமை (08) கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஆர்ஜென்டீனாவின் மென்டோஸா நகருக்கு அனுப்பப்படவுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ள னர்.
பிரான்ஸ் அணி தற்போது தென் அமெரிக்காவில் சுற்றுலா மேற்கொண்டுள்ளது. மெண்டோஸா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற றக்பி டெஸ்ட் போட்டியில் ஆர்ஜென்டீனாவை 28-13 புள்ளிகள் விகிதத்தில் பிரான்ஸ் வென்றது. இப்போட்டியிலேயே மேற்படி வீரர்கள் இருவரும் சர்வதேச றக்பிக்கு அறிமுகமாகியமை குறிப்பிடத்தக்கது. அன்றிரவு மெண்டோஸா நகரில் பிரெஞ்சு அணியினர் தங்கியிருந்தனர். இவ்வீரர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அது மிகவும் பாரதூரமானதாகும் என பிரெஞ்சு றக்பி சம்மேளனத்டதின் தலைவர் புளோரியன் கிறில் தெரிவித்துள்ளார். இந்த விசாரணையின் பெறுபேற்றுக்காக தான் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மெண்டோஸா வழக்குத் தொடுநர் அலுவலகத்தின் பேச்சாளர் மார்ட்டின் அஹுமதா இது தொடர்பாக கூறுகை யில், விசாரணைகளுக்காக புவனேஸ் அயர்ஸுக்கு செல்லவுள்ளதாவும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்து டன் விசாரணை முடிவு ஒத்திருந்தால், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜேகோ, ஓராதோ இருவரும் கடந்த வருடம் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சம்பியன்ஷிப் போட்டி யில் பட்டம் வென்ற பிரெ ஞ்சு அணியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு றக்பி அணி நேற்று புதன்கிழமை உருகுவேயுடன் மோதியது. அதன்பின் அவ்வணி மீண்டும் ஆர்ஜென்டீனாவுக்குச் சென்று, நாளை மறுதினம் சனிக்கிழமை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.
அந்நகரிலுள்ள ஹோட்டலொன் றில் பெண்ணொருவருக்கு எதிராக மேற்படி வீரர்கள் இருவரும் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டனர் என உள் ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைய டுத்து இரு வீரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு உள்ளூர் அதிகா ரிகள் உத்தரவிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM