bestweb

மேற்கு ஆசிய இளையோர் விரைவு செஸ் போட்டி இலங்கைக்கு 2 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்

Published By: Digital Desk 7

11 Jul, 2024 | 12:34 PM
image

(நெவில் அன்தனி)

வஸ்கடுவ, சைட்ரஸ் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்ற மேற்கு ஆசிய இளையோர் விரைவு (Rapid)  செஸ் போட்டியில் இலங்கை 2 தங்கப் பதக்கங்கள் உட்பட 8 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த நிலையில் 3ஆம் இடத்தைப் பெற்றது.

10 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் சமுதித்த சசேன் பண்டார ஹேரத், 14 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் திசரிந்து இந்துவர ஆகிய இருவரும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர். அவர்கள் இருவரும் தத்தமது பிரிவுகளில் வழங்கப்பட்ட 7 மொத்த புள்ளிகளில் தலா 5.5 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்களை விட 3 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.

எட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான விரைவு செஸ் போட்டியில் எலீஷா வர்ணகுலசூரிய பெர்னாண்டோ வெள்ளிப் பதக்கத்தையும் ரி.ஐ. பண்டார  வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

எட்டு வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் துலெய்ன் தேனுல அம்பகஹாவத்த, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் செதும்லீ தேவ்ஹரா பல்லியகே ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் ரிசாலி லோஹன்சா ஜயவீர, 10 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் செனித்த செஹாஸ் தின்சர கருணாசேன ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இப் போட்டியில் கஸக்ஸ்தான் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் முதலாம் இடத்தைப் பெற்றது.

இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை  வென்று இரண்டாம் இடத்தைப் பெற்றது.

ஈரான் 2 தங்கப் பதக்கங்களுடன் 4ஆம் இடத்தைப் பெற்றது.

7 சுற்றுகளைக் கொண்ட இப் போட்டியில் கஸக்ஸ்தான், இந்தியா, இலங்கை, ஈரான், பங்களாதேஷ், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்குபற்றினர்.

தற்போது வேகமான நேரக் கட்டுப்பாடு (Blitz) செஸ் போட்டி நடைபெற்றுவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

League One கிண்ணத்தையும் 10 இலட்சம்...

2025-07-19 01:34:59
news-image

பி அடுக்கு 50 ஓவர் கிரிக்கெட்டில்...

2025-07-19 01:42:05
news-image

இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில்...

2025-07-16 23:05:12
news-image

தீர்மானம் மிக்க ரி20 கிரிக்கெட் போட்டியில்...

2025-07-16 20:56:13
news-image

பங்களாதேஷுடனான தீர்மானம் மிக்க போட்டியில் முதலில்...

2025-07-16 19:21:08
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-07-16 18:53:36
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர்...

2025-07-16 17:07:14
news-image

பாடசாலைகளுக்கு இடையிலான வட மாகாண கராத்தே...

2025-07-16 15:51:03
news-image

ரி20  தொடரை வெல்வதற்கு இலங்கை அணியினர்...

2025-07-15 20:22:41
news-image

டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு...

2025-07-15 17:34:16
news-image

இந்தியாவை 22 ஓட்டங்களால் வீழ்த்தி டெஸ்ட்...

2025-07-14 22:36:02
news-image

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர்...

2025-07-14 12:46:54