உணவிலுள்ள சக்திப் பெறுமானத்தை கணிப்பிடும் உணர்கலங்களைக் கொண்ட ஊடுகாட்டும் உபகரணம் 

Published By: Raam

11 Jan, 2016 | 09:17 AM
image

நீரி­ழிவு, இரத்த அழுத்தம் உள்­ள­டங்­க­லான நோய்­களால் பாதிக்­கப்­பட்டு உடல் நிறையைக் குறைக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­தி­லுள்­ள­வர்­களும் உடல் ஆரோக்­கியம் மற்றும் எழி­லான தோற்றம் என்­ப­வற்­றுக்­காக உணவுக் கட்­டுப்­பாட்டைப் பேண விரும்­பு­ப­வர்­களும் தமது உணவில் மறைந்­துள்ள சக்திப் பெறு­மா­னத்தை கண்­ட­றிந்து உண்ணும் உணவின் அளவைத் தீர்­மா­னிக்க உதவும் கைய­டக்­க­மான அதிநவீன உப­க­ர­ண­மொன்று அமெ­ரிக்க லாஸ் வெகாஸில் இடம்­பெற்ற பாவ­னை­யாளர் இலத்­தி­ர­னியல் உப­க­ரணக் கண்­காட்­சியில் அறி­மு­கப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டுள்ளது.
டயட்­ஸென்ஸர் என அழைக்­கப்­படும் இந்த விளை­யாட்டு சீட்டு அட்டை பொதியை விடவும் சிறிய உப­க­ர­ண­மா­னது உண­வி­லுள்ள போஷ­ணை­களை ஊடு­காட்டும் செயன்­மு­றை­மூலம் கணிப்­பிடும் உணர்­கல மூலக்கூ­று­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது.இந்த உப­க­ரணம் சமைத்த உண­வுகள் அல்­லது பழம், மரக்­க­றிகள், இறைச்சி, மீன் மற்றும் பச்­ச­டிகள் போன்ற சமைக்­காத உண­வு­க­ளி­லுள்ள போஷ­ணை­களை அடை­யாளம் கண்டு கணிப்­பி­டக்­கூ­டிய மென்­பொருள் நிகழ்ச்சித் திட்­ டத்தை கொண்­ட­மைந்­துள்­ளது.மேற்­படி உப­க­ரணம் ஒரு அகல நாடா, அகச் சிவப்பு நிற­மாலை கருவி (ஸ்பெக்ரோ மீற்றர்) என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­யுள்­ளது.ஒவ்­வொரு போஷணைப் பொரு ளும் ஒன்­றுக்­கொன்று சிறிது வேறு­பட்ட விதத்தில் ஒளியை வெளிப்­ப­டுத்­து­கின்­றன. இந்­நி­லையில் உணவுப் பொருள் ஒன்­றி­லி­ருந்து ஒளியை மேற்­படி ஊடு­காட்டும் உப­க­ரணம் உள்­வாங்கி கணிப்­பீடு செய்து அது எந்த போஷ­ணைக்­கு­ரி­யது என்­பதை கண்­ட­றி­கி­றது.அதன் பின் அந்த உப­க­ரணம் தர­வு­களை பாவ­னை­யா­ளரின் ஸ்மார்ட் கைய­டக்கத் தொலை­பே­சிக்கு அனுப்­ பு­கி­றது. அத்­துடன் அந்த உபகரணம் குறிப்­பிட்ட உணவு நஞ்­சேற்றம் அடைந்­துள்­ளதா என்­ப­தையும் கண்­ட­றி­கி­றது. மேற்­படி உபகரணம் உண­வ­கங்­களில் உணவு உண்­ப­வர்­க­ளுக்கு அந்த உண­வு­களில் மறைந்­துள்ள போஷ­ணையின் அளவை துல்­லி­ய­மாக கணிப்­பிட உதவும்.இந்த உபகரணத்தின் விலை 170 ஸ்ரேலிங் பவுண் ஆகும். அதேசமயம், அதற்குரிய மென் பொருளைப் பதிவிறக்கம் செய்ய மாதாந்தம் 13 ஸ்ரேலிங் பவுண் சந்தா தொகையை செலுத்த வேண் டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உறக்கம் தொடர்பான கோளாறுக்குரிய நவீன சிகிச்சை

2025-06-17 16:02:55
news-image

ஒவேரியன் டெரடோமா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-06-16 17:30:08
news-image

ரிலாப்சிங் பொலிகாண்ட்ரிடிஸ் எனும் அரிய பாதிப்பிற்குரிய...

2025-06-14 17:17:51
news-image

ஹைபோநெட்ரீமியா பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-10 19:06:52
news-image

நவீன சத்திர சிகிச்சைகளின் வகைகள் என்ன?

2025-06-09 17:38:05
news-image

லும்பர் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் எனும் கீழ்ப்பக்க...

2025-06-07 20:35:08
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்புச் சக்தியை...

2025-06-06 18:22:59
news-image

மிட்ரல் வால்வு ஸ்டெனோசிஸ் எனும் இதய...

2025-06-05 17:22:20
news-image

களனி பல்கலைக்கழக ராகம மருத்துவப்பீடத்தில் புதிய...

2025-06-05 13:51:58
news-image

இன்ஹேலரை பாவித்தால் குருதி அழுத்தம் அதிகரிக்குமா?

2025-06-04 18:15:59
news-image

வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-06-02 16:05:50
news-image

பிறந்த பிள்ளைகளுக்கு ஏற்படும் மைலோமெனிங்கோசெல் பாதிப்பிற்குரிய...

2025-05-26 17:06:53