(நெவில் அன்தனி)
லண்டன் அகில இங்கிலாந்து புற்தரை டென்னிஸ் மற்றும் க்ரொக்வெட் கழக அரங்கில் நடைபெற்றுவரும் 137ஆவது வருடாந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமாட்டிகள் (மகளிர்) ஒற்றையர் பிரிவுக்கான ஓர் அரை இறுதியில் விளையாடுவதற்கு இத்தாலி வீராங்கனை ஜெஸ்மின் பாவோலின், குரோஏஷிய வீராங்கனை டொன்னா வேகிக் ஆகியோர் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது.
விம்பிள்டனில் இந்த இருவரும் அரை இறுதியில் விளையாடுவது இதுவே முதல் தடவையாகும்.
ஜெஸ்மின் பாவோலின் இந்த வருடம் நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார்.
அரை இறுதிக்கு முன்னோடியாக செவ்வாய்க்கிழமை (09) இரவு நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் எம்மாக நவாரோவை எதிர்த்தாடிய ஜெஸ்மின் பாவோலின் 2 நேர் செட்களில் (6 - 2, 6 - 1) வெற்றி பெற்றார்.
இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தின் லுலு சுன்னிடம் (எல். ரடோவ்சிக்) கடும் சவாலை எதிர்கொண்ட டொன்னா வேகிக் 2 - 1 என்ற செட்கள் அடிப்படையில் (5 - 7, 6 - 4, 6 - 1) வெற்றிபெற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM