(நெவில் அன்தனி)
கம்போடியாவின் பெனொம் பென், பென், மொரோடொக் டெக்கோ தேசிய விளையாட்டுத் தொகுதி அரங்கில் நேற்று புதன்கிழமை (10) ஆரம்பமான ஆசிய கடல்சூழ் நாடுகள் குழு 4க்கான தனது முதலாவது போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தது.
கத்தாருக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் 1 - 2 என்று ஆட்டங்கள் கணக்கில் இலங்கை தோல்வி அடைந்தது.
2 ஓற்றயைர் ஆட்டங்கள், ஒரு இரட்டையர் ஆட்டம் ஆகியவற்றைக் கொண்ட இந்தப் போட்டியில் இரட்டையர் போட்டியிலேயே இலங்கை வெற்றிபெற்றது.
சிரேஷ்ட வீரரும் அணித் தலைவருமான ஹர்ஷன கொடமான்னவும் தெஹான் சஞ்சய விஜேமான்னவும் ஜோடி சேர்ந்து கத்தாரின் மோசா அல்ஹரசி, மஷாரி நவாவ் ஆகிய ஜோடியினரை 6 - 4, 6 - 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிகொண்டனர்.
ஆனால், அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு ஒற்றையர் ஆட்டங்களிலும் இலங்கை தோல்வியைத் தழுவியது.
கத்தார் வீரர் ரஷேத் நவாவிடம் 4 - 6, 3 - 6 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் அஷேன் சில்வா தோல்வி அடைந்தார்.
இரண்டாவது ஒற்றையர் போட்டியிலும் இலங்கைக்கு தோல்வியே கிடைத்தது.
முபாரக் ஷனன் ஸயித் அல்ஹரசியிடம் 3 - 6, 1 - 6 என்ற 2 நெர் சேட்களில் அப்ன பெரேரா தோல்வி அடைந்தார்.
ஆசிய கடல்சூழ் நாடுக ள் குழு 4க்கான போட்டியில் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை தனது அடுத்த இரண்டு போட்டிகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தையும் கஸக்ஸ்தானையும் எதிர்த்தாடவுள்ளது.
பி குழுவில் குவைத், கம்போடியா, ஈராக், மியன்மார் ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.
இரண்டு குழுக்களிலும் லீக் போட்டிகள் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் தரமுயர்வுக்கான நொக் அவுட் சுற்றில் மோதும்.
கடைசி இடங்களைப் பெறும் அணிகள் தரமிறக்கத்துக்கான சுற்றில் விளையாடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM