(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் சகல கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது.மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் அரசியல் நிலைப்பாட்டுடன் போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு அமைய ஒரு சில தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் கம்பஹா - பென்முல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
புகையிரத சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு பொது மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்குகிறார்கள்.
பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது.பொது மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை எடுங்கள்.இவர்களின் அரசியல் நிலைப்பாடுகளுக்காக அப்பாவி மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM