(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
திருடர்களை ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டை நிர்வகிக்க முடியாது. அதனால் திருடர்களை ஒழிக்க முடியுமான, பாராளுமன்றத்துடன் தொடர்புடைய ஒருவரை களுத்துறை மாவட்டத்தில் இருந்து அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். களுத்துறை மாவட்டத்தில் இருந்தே அடுத்த ஜனாதிபதி தெரிவாவார் என எதிர்க்கடசி உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற மதுவரி கட்டளைச் சட்டத்தின் அறிவித்தல்கள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாடு வீழ்ச்சியடைந்தபோது நாட்டை பொறுப்பேற்று, மக்கள் வரிசை நிலையில் இருப்பதை முடிவுக்கு கொண்டுவந்தமையையிட்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ஆனால் அவர் பொருளாதாரம் தொடர்பாக எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் எனக்கு தெரியாது. அதனால் அது தொடர்பில் நான் ஒன்றும் தெரிவிக்கமாட்டேன் என்றாலும் ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை சரியான முறையில் முன்னெடுத்தாலும் அவர் தவறானவர்களை தன்னுடன் வைத்திருந்தால், மக்கள் ஒருபோதும் வாக்களிக்கப்போவதில்லை.
நான் ஏன் இவ்வாறு சொல்வதென்றால், கடந்த 7ஆம் திகதி களுத்துறையில் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். ஜுலை 7 என்பது மிகவும் பயங்கரமான தினமாகும்.
அந்த கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷவும் இருந்தார். மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் எனக்கு தனிப்பட்ட மதிப்பு இருக்கிறது. அவர் இல்லை என்றிருந்தால். யுத்தம் நிறைவடைந்திருக்காது. அவர் உறுதியான தீர்மானங்களை அன்று எடுத்தார். ஆனால் இந்த நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைய காரணமான 3 ராஜபக்ஷவினரும் அந்த கூட்டத்தில் இருந்தார்கள்.
கோத்தாபய ராஜபகஷ்வை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டாம் என நான் அன்று தெரிவித்தேன். ஆனால் அவர்கள் அதனை வழங்கினார்கள். இறுதியில் கலவரம் ஒன்று ஏற்படும்போது, அதற்கு முகம்கொடுக்க முடியாமல் அவர் தப்பி ஓடினார்.
அவரும் அந்த கூட்டத்தில் இருந்தார். அதேபோன்று இங்கிலாந்து வைத்தியசாலையில் இருந்த குப்பைகளை எமது நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தவரும் இருந்தார். நல்லவர்களும் இருந்தார்கள். ஆனால் ஜனாதிபதி உரையாற்ற ஆரம்பிக்கும்போது தங்கத்தின் அனுமதி என குறிப்பிட்டார்.
இந்த வார்த்தைக்கு சமூகவலைத்தளத்தில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஏனெனில் தங்க மாலை திருடிய பலர் களுத்துறையில் இருந்தார்கள். ராேஹித்த அவ்வாறானவர் அல்ல.
ஆனால் அவருக்கும் இந்த குற்றச்சாட்டை இந்த சபையில் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு அவர் பதிலும் வழங்கி இருக்கிறார். ஆனால் அந்த மேடையில் திருடர்கள் இருந்தார்கள். இவர்களை வைத்துக்கொண்டா ரணில் விக்ரமசிங்க நாட்டை நிர்வகிக்கப்போகிறார் என கேட்கிறேன்.
அதனால் அநுரகுமார, சஜித் பிரேமதாச ரணில் விக்ரமசிங்க யாராக இருந்தாலும் நாட்டை நிர்வகிக்க நினைத்தால், நீங்கள் திருடர்களை சேர்த்துக்கொள்ள வேண்டாம். என்றாலும் தங்கம் என தெரிவித்த வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது.
அந்த வார்த்தை எமது மாவட்டத்தை அசிங்கப்படுத்துவது போன்றாகும். அதனால் எமது மாவட்டத்துக்கு இருக்கும் இந்த கெட்ட பெயரை இல்லாதொழிக்க பாராளுமன்றத்துடன் தொடர்புடை ஒருவரை எமது நவ லங்கா கட்சியில் இருந்து களமிறக்குவோம். அடுத்த ஜனாதபதி களுத்துறை மாவட்டத்தில் இருந்தே தெரிவாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM