நுவரெலியாவில் அதிசொகுசு பஸ் விபத்து ; 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 7

11 Jul, 2024 | 09:31 AM
image

நுவரெலியாவிலிருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா சென்ற அதிசொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தானது இன்று வியாழக்கிழமை (11) அதிகாலை நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் தெரியவருகையில்,

அதிசொகுசு தனியார் பஸ் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து காரணமாக நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.

நுவரெலியா கிரேன் ஹோட்டலில் தொழில் புரியும் ஊழியர்கள் சுற்றுலா சென்ற பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது பஸ்ஸில் பயணம் செய்த சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24