மனைவியுடனான பிரச்சினையால் பலர் மதுபானங்களை அருந்துகிறார்கள்; விலைகளை குறைத்து மகிழ்விக்க வேண்டும் - சாமர சம்பத் வலியுறுத்தல்

Published By: Vishnu

11 Jul, 2024 | 02:51 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மனைவியுடனான பிரச்சினையால் பலர் மதுபானங்களை அருந்துகிறார்கள். மதுபானங்களின் விலையேற்றத்தால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.கடலில் மிதந்து வரும் திரவத்தை அருந்து உயிரிழக்கிறார்கள். ஆகவே மதுபானங்களின் விலைகளை குறைத்து மது அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற  மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி,இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மதுவரி  சட்டங்களை திருத்துவதாலும்,புதிதாக மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குவதாலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.மதுபானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நான் தொடர்ந்து சபையில்  உரையாற்றியுள்ளேன்.மதுபானங்களின் விலை அதிகரிப்பால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளன. 

 மதுபானங்களின் விலை அதிகரிப்பால் மதுவரி திணைக்களம் இந்த ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம் 50 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளன. மொத்த சனத்தொகையில் 60 இலட்சமானோர் மது அருந்துகிறார்கள்.உடல் வலி,மன வேதனை மற்றும் மனைவியுடனான பிரச்சினை ஆகிய காரணிகளால் இவர்கள் மது அருந்துகிறார்கள். குறைந்த விலையில் இருந்த அதிவிசேட மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்பட்டதால் சமூக கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

மதுபான நுகர்வுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதால்  சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்துள்ளன.இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 50 பேர் உயிரிழந்துள்ளார்கள். விலை அதிகரிப்பால்  கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்தி ஐந்து மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.ஆகவே மதுபான விலைகளை குறைத்து மதுபானங்களை அருந்துபவர்களை மகிழ்விக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய வரிகளை குறைக்க வேண்டிய தேவை கிடையாது.எமக்கான தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும்.ஆகவே மதுபானங்களின் விலைகளை குறைக்குமாறு இறுதியாக வலியுறுத்துகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-16 09:16:46
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-16 09:15:54
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-16 09:13:26
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12
news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58