(நெவில் அன்தனி)
ரங்கிரி, தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (10) நடைபெற்ற 5ஆவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 15ஆவது போட்டியில் நடப்பு சம்பியன் கண்டி பெல்கன்ஸை 8 விக்கெட்களால் கோல் மார்வல்ஸ் வெற்றிகொண்டது.
ப்ராபாத் ஜயசூரியவின் துல்லியமான பந்துவீச்சு, அலெக்ஸ் ஹேல்ஸ், பானுக்க ராஜபக்ஷ ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் கோல் மார்வல்ஸின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் மார்வல்ஸ் 19.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 188 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 8 புள்ளிகளுடன் கோல் மார்வல்ஸ் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது.
ஜெவ்னா கிங்ஸும் 8 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலிடத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது.
நிரோஷன் திக்வெல்லவும் அலெக்ஸ் ஹேல்ஸும் 7 ஓவர்களில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். நிரோஷன் திக்வெல்ல 25 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொர்டர்ந்து டிம் சீஃபேர்ட் 16 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
எனினும், அலெக்ஸ் ஹேல்ஸும் பானுக்க ராஜபக்ஷவும் எவ்வித சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து கோல் மார்வல்ஸின் வெற்றியை உறுதிசெய்தனர்.
அலெக்ஸ் ஹேல்ஸ் 55 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 86 ஓட்டங்களுடனும் பானுக்க ராஜபக்ஷ 26 பந்துகளில் 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கண்டி பெல்கன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.
தினேஷ் சந்திமால், அண்ட்றே ப்ளெச்சர் ஆகிய இருவரும் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், சந்திமால் (32) ஆட்டம் இழந்ததும் மேலும் 2 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.
எனினும் ஆரம்ப வீரர் அண்ட்றே ப்ளெச்சர், ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.
ஆனால், இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
மெத்யூஸ் 29 ஓட்டங்களையும் ப்ளெச்சர் 69 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் ரமேஷ் மெண்டிஸ் 28 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விழ்த்தினர்.
ஆட்டநாயகன்: ப்ரபாத் ஜயசூரிய.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM